வெள்ள அபாயம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மானிட்டோபா அரசாங்கம், மூன்று மில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தற்பாதுகாப்பு தயாரிப்புகள் அல்லது உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்காக இந்த தொகை செலவிடப்படவுள்ளது. இந்த தொகையினை மாகாணம், நகராட்சிகளுக்கு செலுத்தலாம்.

ஒவ்வொரு நகராட்சியும் 150,000 அமெரிக்கா டொலர்களையும், வின்னிபெக் நகராட்சி 500,000 பெற தகுதியுடையன.

இதுகுறித்து நகராட்சி உறவுகள் அமைச்சர் ரோசெல் ஸ்கொயர்ஸ் கூறுகையில், ‘நகராட்சிகள் தங்கள் சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க சேதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க நாங்கள் உதவ விரும்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.