இலையுதிர்காலத்தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு திரும்புவதற்கான திட்டம் அறிவிப்பு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாணவர்கள் இலையுதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு திரும்புவதற்கான திட்டத்தினை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் முதல் வகுப்பின் முதல் வாரத்தில் படிப்படியாக மீள தொடங்கப்படும் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

புதிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள், ஊழியர்களை நிலைநிறுத்த கூடுதல் நேரத்தை அனுமதிக்கும்.

அனைத்து ஊழியர்களும் செப்டம்பர் 8ஆம் திகதி பாடசாலை சுகாதார மற்றும் பாதுகாப்புக் குழுக்களுடன் சந்திப்பார்கள்.

மாணவர்கள் செப்டம்பர் 10ஆம் திகதி வரை நோக்குநிலைக்காக (For orientation) வகுப்பிற்கு திரும்ப மாட்டார்கள். அந்த நோக்குநிலைகளை எவ்வாறு அமைப்பது என்பதை மாவட்டங்கள் மற்றும் பாடசாலைகள் தீர்மானிக்கும்.