மாடியிலிருந்து குழந்தைவண்டி மீது விழுந்த குளிர்சாதனம் – 2 வயதுச் சிறுமி உயிரிழப்பு

கனடா – ரொறென்ரோ நகரில் எட்டாவது மாடி யன்னலிலிருந்து வளி சீராக்கி குளிர்சாதனம் ஒன்று குழந்தைகளை கொண்டு தள்ளுவண்டியின் மீது வீழ்ந்ததில் 2 வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்தார்.

ரொறென்ரோ நகரில், பிள்ளையைத் தள்ளுவண்டியில் வைத்துத் தாயார் ஒருவர் நடத்து சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளிர்சாதனம் விழுந்ததில் சிறுமியின் தாயாருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி பலத்த காயங்களின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கட்டடத்தை நிர்வகிக்கும் ரொறென்றோ சமூக வீடமைப்பு நிறுவனம் சிறுமியின் குடும்பத்துக்கு அதன் இரங்கலைத் தெரிவித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்கள் குளிர்சாதனக் கருவிகளைப் பாதுகாப்பான முறையில் யன்னல்களில் பொருத்துமாறு அந்த நிறுவனம் கோரியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரொறென்ரோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.