ஒன்றாரியோவின் லண்டன் பகுதியில் துப்பாக்கிகள்- வெடிமருந்துகள் கைப்பற்றல்

ஒன்றாரியோவின் லண்டன் பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 2 துப்பாக்கிகள், ஒரு பலிஸ்ரிக் (ballistics) அங்கி மற்றும் வெடிமருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அடிலெய்ட் வீதி மற்றும் ஹமில்ரன் வீதிக்கு அருகிலுள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்வத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் பிற்பகுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.