வின்ட்சர் பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது

வின்ட்சர் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரோஸ்பிரையர் வீதிக்கு அருகிலுள்ள ஃபாரஸ்ட் க்லேட் ட்ரைவில் உள்ள பூங்காவில நேற்று (திங்கள்கிழமை) மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த தாக்குதலின் போது குறித்த இளைஞன், கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரை இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை காணொளி வடிவ ஆதாரத்தை கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், முக்கிய குற்றப்பிரிவின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த காணொளி இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் இருவரும் தாக்குதல் குற்றச்சாட்டை எதிர்கொள்வதாகவும், இந்த சம்பவத்தில் எந்த ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.