மழலையர் பாடசாலை குழந்தையொன்றினை காயப்படுத்திய இளைஞன் கைது

மழலையர் பாடசாலை குழந்தையொன்றினை காயப்படுத்தியதாகக் கூறப்படும் 30 வயதான இளைஞரொருவரை ரொறன்ரோ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஒன்றாரியோ கிழக்கு க்விலிம்பரியில் உள்ள அவர் லேடி ஒஃப் குட் கவுன்சில் கத்தோலிக்க தொடக்க மழலையர் பாடசாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அருகிலுள்ள வீடொன்றில் இருந்த இளைஞர் விளையாட்டு மைதானத்தில் வேலி ஒன்றை உருவாக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலிலேயே குறித்த ஐந்து வயது குழந்தை காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

துணை மருத்துவர்கள் ஐந்து வயது மாணவரை பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறுகிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது மோசமான தாக்குதல், ஆயுதத்தால் தாக்கியது, ஆபத்தான நோக்கத்திற்காக ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்தான பொதுவான தொல்லை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.