உக்ரைனில் இராணுவ பயிற்சியை விரிவுபடுத்த கனடா திட்டம்

உக்ரைனில் இராணுவ பயிற்சி திட்டத்தை கனடா விரிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான அறிவிப்பை கனடா இன்று (திங்கட்கிழமை) வெளியிடும் என கூறப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரியா ஃப்ரீலண்ட் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜான் ஆகியோர் இன்று விசேட ஊடக சந்திப்பொன்றை இது தொடர்பாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கனேடிய தரப்பிலிருந்து இது தொடர்பான எவ்வித உறுதிபடுத்தல்களும் வெளியாகவில்லை.