டிரக் வாகனம் பல கார்களில் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் – பொலிஸார் விசாரணை

கனடாவின், கலெடனில் டிரக் வாகனம், பல கார்களில் மோதிய பின்னர் ஒரு கட்டடத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

டிரக் வாகனம் சமிக்ஞை விளக்கு கம்பங்களையும் மோதிக் கொண்டு அங்கு நின்ற கார்கள் மீதும் மோதி இறுதியில் அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் மோதியுள்ளது.

இதையடுத்து குறித்த டிரக் வாகனத்தின் சாரதி தீயணைப்பு படையினரால் வாகனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுன், ஏனைய வாகனங்களில் இருந்தவர்களில் சிலரும் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.