பார்க்டேலில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்

பார்க்டேல் பகுதியில் வாகனம் மோதி படுகாயமடைந்த ஆண் ஒருவர் பாரதூரமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஜேம்சன் அவென்யூ பகுதி வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தோன்றுவதாகவும், ஒரு வாகனத்துடன் மோதுண்ட பிறிதொரு வாகனம் பின்னர் பாதசாரி கடவையில் நடந்து சென்ற நபர் மீது மோதுண்டுள்ளது.

இதில் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இருந்தபோதிலும், காயமடைந்தவர் பெயர் வயது குறித்த மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

இந்த விபத்துடன் தொடர்புடைய இரண்டு வாகனங்களும் சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்தோர் சிலரிடம் இது தொடர்பில் தகவல் அறிந்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.