கனேடிய பொதுத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி

கனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் இறுதி முடிவுகளின்படி லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 31,339 வாக்குகளையும் கொன்சர்வேற்றிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட பொப்பி சிங் 10,088 வாக்குகளையும் புதிய ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட கிங்ஸ்லி வோக் 5,735 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.