ஏழு வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு – விசாரணைகள் தீவிரம்

ஹமில்ரனில் கிழக்கு பகுதியில் ஏழு வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் குறித்து, பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கேஜ் அவென்யூ வடக்கு மற்றும் பார்டன் வீதி ஈஸ்ட் பகுதியில் உள்ள கார்டன் வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு 7:50 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரப் பிரிவினர், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்ட குறித்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

ஆரம்பத்தில் குறித்த சிறுவன் ஆபத்தான காயங்களுடன் காணப்பட்ட போதிலும், பின்னர் நிலையான நிலையில் இருப்பதாக அவசரப் பிரிவினர், தெரிவித்தனர்.

எதற்காக குறித்த சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்ற நிலையில், சிறுவன் வீட்டிற்கு வெளியே உள்ள பிரதான மாடியில் இருந்தபோது சுடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.