சுகாதார ஊழியர்களுக்கு வித்தியாசமாக நன்றி தெரிவித்த மொன்றியல் மாநகர காவல்துறையினர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கியூபெக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது என கியூபெக் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி கியூபெக் மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2840ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கதுக்கு உள்ளனவர்களில் 1 361 பேர் மொன்றியல் மாநகரத்தில் இனம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மருத்துவமனையில் நோயாளர்களை காப்பற்றுவதற்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களும் தமது உயிரினை பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றது அவர்களது சேவை நேரமும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய இந்த கடினமான காலப் பகுதியில்தான் மருத்துவ துறையில் பணி புரிகின்ற வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையினுடைய மகத்துவம் மக்கள் அனைவராலும் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கின்றபோது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மருத்துவ துறையில் சேவையாற்றிய 82 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அத்தோடு 6 காவல்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கியூபெக் சுகாதார திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று இரவு சுகாதார துறையில் பணிபுரிகின்ற அணைத்து முன்னிலை உத்தியோகத்தர்களுக்கும் அவர்களது தியாகத்துடனான அர்ப்பணிப்பிற்கு நன்றி செலுத்தும் முகமாக மொன்றியல் மாநகர காவல்துறை முடிவு செய்தது. அந்த வகையில் மொன்ட்ரியல் பல்கலைக்கழக மருத்துவமனை மையத்தின் முன் காவல்துறையின் வாகனங்கள் அணி வகுத்து நின்று ஒலியெழுப்பி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இது இன்று சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதனை வலேரி செயின்ட் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதுடன் “இந்த கடினமான காலங்களில் நாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் காவல்துறை நன்றி சொல்கின்றோம் “என்று தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இது உண்மையில் ஒரு தனித்துவமான தருணம், “எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று வீடியோவில் கூறியுள்ளார்.

 

அந்த வீடியோவை பார்க்க….

MALADE COMME MOMENT ❤️🥰😭Les policiers sont venus nous dire merci pour tous nos efforts déployés en ces moments difficiles

Posted by Valérie St-Onge on Sunday, March 29, 2020