கியூபெக் மாகாணத்திலுள்ள திறந்தவெளி டிரைவ்-இன் திரையரங்குகள் திறப்பு

கியூபெக் மாகாணத்திலுள்ள நான்கு திறந்தவெளி டிரைவ்-இன் (drive in theaters) திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த திரையரங்குகளுக்கு வருகை தருகின்றவர்கள் கியூபெக் மாகாண அரசினுடைய சுகாதார அறிவித்தல்களை கடைபிடிக்க வேண்டும்.

அத்துடன், அவர்களை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டினோவில் (Gatineau) உள்ள திரைப்பட இரசிகர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் திறந்தவெளி டிரைவ்-இன் திரையரங்கிற்கு செல்ல தொடங்கியுள்ளனர்.