ஒன்ராறியோவில் பனிச்சரிவு – இருவர் உயிரிழப்பு

ஒன்ராறியோவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர்.

பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தவர்களே நேற்று(திங்கட்கிழமை) இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதன்போது 11 மற்றும் 15 வயதான இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 14, 31 மற்றும் 37 வயதான மூவரே காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் காணாமல் போனவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.