ஸ்கார்பரோவில் நான்கு வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூவர் காயம்

ஸ்கார்பரோ நெடுஞ்சாலை 401இல், நான்கு வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதில் ஒரு பெண் ஆபத்தான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை 401 மற்றும் வார்டன் அவென்யூ பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்து குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விபத்தில் காயமடைந்துள்ள இரண்டு குழந்தைகளும் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துவிட்ட போதும், பல வாகனங்கள் இவ்விபத்தில் தொடர்புபட்டுள்ளதால் இதன் விசாரணைகள் முழுமையடைய தாமதம் ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.