2021 ஆம் ஆண்டில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் முடிவு

2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க ஜஸ்டின் ரூடோ தலைமையிலான மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய், குளிர்பான உறிஞ்சு குழாய், தகடுகள், பலூன் குச்சிகள் ஆகியன தடை செய்யப்படும் பொருட்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூழல் மாசுபாடு சிக்கலை எதிர்கொள்ளும் ஒரு பெரும் பகுதியாக பிளாஸ்டிக் காணப்படுகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எனவே இந்த தடை தொடர்பான அறிவிப்பு இன்று திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கனடாவில் 9 சதவீத பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி செய்யப்படுகின்றதாகவும் 87 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளாகவே காணப்படுவதாகவும் 2016 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.