800,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடம்பர பொருட்களை திருடியவர் கைது

பிரிட்டிஷ் கொலம்பியாவில், 800,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடம்பர பொருட்களை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான ஆரோன் ஜேம்ஸ் யங் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார்ன்வால் வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து திருடிய குற்றத்திற்கான ஆரோன் ஜேம்ஸ் யங், கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து பிணையில் விடுதலையான அவர், குடியிருப்பு மற்றும் மூன்று வணிக சேமிப்பு பெட்டங்கள் என நான்கு திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில், அவர் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்;. அவர் மீது தற்போது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து, ஆடம்பர கைப்பைகள், ஆடை, காலணிகள், கடிகாரங்கள், மதுபான போத்தல்கள், வாசனை திரவியங்கள், தனிப்பட்ட மின்னணுவியல், நகைகள், இசைக்கருவிகள், மின் கருவிகள், விளையாட்டு பொருட்கள் என பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து தற்போது பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.