பிரேன்ட்போர்ட் துப்பாக்கி சூடு – இரு சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு

ஹெமில்டன்- பிரேன்ட்போர்ட்டில் துப்பாக்கி சூடு நடத்திய இருவரை பொலிஸார், தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் நெடுஞ்சாலை 403இல், சாம்பல் அல்லது வெள்ளி நிற மெர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனத்தில் தப்பிச் சென்று விட்டதாகவும், தற்போது அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்போர்ன் வீதிக்கு அருகிலுள்ள பெயின் வீதியில், அதிகாலை 2 மணியளவில் இரண்டு ஆண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், 25 வயதான மூன்றாவது ஆண் சம்பந்தப்பட்டதாகவும், அவரே தற்போது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிராண்ட்ஃபோர்ட் பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும், இந்த சந்தேக நபர்களின் வாகனத்தை துரத்தி பிடிக்க முற்பட்ட போது, சந்தேக நபர்கள் வேண்டுமென்றே தங்கள் வாகனத்தை மோதியதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த முயற்சியை கைவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார், கேட்டுக் கொண்டுள்ளனர்.