சிறுவன் மீது துப்பாக்கி சூடு – துப்பாக்கிதாரியை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஹமில்ரனில் 7வயதுச் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பலத்த காயங்களுக்கு உள்ளாக்கிய துப்பாக்கிதாரியைக் கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

20 வயதான ஜெய்டன் பீற்றர் என்பவரே, இவ்வாறு தேடப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் மிக ஆபத்தானவர் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாகத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 23ஆம் திகதி இரவு கார்டன் வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட சம்பவத்தில் சிறுவன் ஒரு திட்டமிடப்படாத இலக்கு எனவும், பிரதான மாடியில் உள்ள ஜன்னல் வழியாக நின்றுக் கொண்டிருந்த போது, இச்சிறுவன் தாக்கப்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.