மே 18 தமிழின படுகொலை தினம் – கனடா அங்கீகாரம்

ஈழத்தமிழர் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவையும் மே 18 தினத்தை தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாகவும் கனடா அங்கீகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறம்ரன் நகரசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 10 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மேயர் பற்றிக் பிரவுன், இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கை செல்ல முயற்சித்த வேளையில் இலங்கை அரசால் தனக்கு விசா மறுக்கப்பட்டதையும், தமிழ் மக்களுக்காக தான் ஜெனீவா வரை சென்று வந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கனடா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.