கனடாவின் சர்ரே பகுதியில் விபத்து – இரு வயோதிபர்கள் படுகாயம்

கனடாவின் சர்ரே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வயோதிபர்கள் காயமடைந்துள்ளனர்.

இரண்டு கார்கள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீதியினை கடந்து செல்ல முற்பட்ட இரண்டு பாதசாரிகளே காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த 50 வயதான இரு வயோதிபர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக இரண்டு கார்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் பனிப்பொழிவு காரணமாக வீதி வழுவழுப்பு தன்மையுடன் காணப்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கடும் பனிபொழிவு காரணமாக வீதிகள் வழுவழுப்பு தன்மையுடன் காணப்படுவதாகவும், இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.