ரயில்களில் மோதி அதிகளவான கிரிஸ்லி கரடிகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்

எட்மன்டனில் உள்ள தேசிய சரணாலயப் பகுதிகளில் நுழையும் ரயில்களால் அதிகளவான கிரிஸ்லி கரடிகள் மோதப்பட்டு உயிரிழப்பதாக அல்பேர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் மற்றும் உயிரியல் பேராசிரியரான கொலின் கசாடி செயின்ட் கிளெய்ர் தலைமையிலான குழு பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கனடிய பசிபிக் ரயில்வே அதிகாரிகள் 2000 ஆம் ஆண்டில் பான்ஃப் (Banff National Park) தேசிய சரணாலயப் பகுதிகளில் நுழையும் ரயில்களால் கிரிஸ்லி கரடிகள் கொல்லப்படுவதை அவதானித்துள்ளனர்.

இதற்கமைய, அப்போதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 21 கிரிஸ்லி கரடிகள் ரயில்களால் மோதப்பட்டு கொல்லப்பட்டுள்ளன.

2010ஆம் ஆண்டு ஆல்பேர்ட்டா வனவிலங்கு சட்டத்தின் கீழ் கிரிஸ்லி கரடிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.