வின்னிபெக் பகுதியில் தீ விபத்து – இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

வின்னிபெக் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களுக்கு உயிராபத்தான காயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள மருத்துவபிரிவினர், அவர்களை தொடர்ந்து அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

சுகாதார அறிவியல் மையத்திலிருந்து சில தொகுதிகள் தொலைவில் உள்ள மெக்டெர்மொட் அவென்யூவில் உள்ள வீடொன்றிலேயே. நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு சற்று முன்னர் இந்த தீவிபத்து சம்பவித்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், சில மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

வீட்டிலுள்ள மற்ற குடியிருப்பாளர்கள் அனைவரும் தாங்களாகவே தப்பிவிட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.