வின்னிபெக்கில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்

வின்னிபெக் பகுதியிலுள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வின்னிபெக் பிரதான செயிண்ட் கென்ரா நகரத்தில் அமைந்துள்ள கடை ஒன்றிலேயே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு போராடி தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.