பகல் நேரத்தில் துப்பாக்கி சூடு – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ரொன்செஸ்வெலிஸில் பகல் நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய, குற்றவாளியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த குற்றவாளி, 5’11 உயரம் கொண்ட ஒல்லிய தோற்றமுடைய ஆண் என விபரித்துள்ள பொலிஸார், அவர் வெள்ளை நிற எஸ்.யு.வி நிற வாகனத்தில் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரொன்செஸ்வெலிஸ் அவெனியூ- கிரெனேடியர் வீதி, தெற்கு டன்டாஸ் வீதி மேற்கை சுற்றிய பகுதியில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில், ரிச்மண்ட் ஹில்லை சேர்ந்த 63 வயதான பாவ்லோ கபுடோ என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூடு எதற்காக நடத்தப்பட்டது என்பது தொடர்பில், இதுவரை எவ்வித தகவலையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.