வன்கூவரில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாதசாரிகள் காயம்

வன்கூவரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிச்சர்ட்ஸ் வீதி மற்றும் பசிபிக் பவுல்வர்ட் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணிக்கு முன்ளதாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் 70 வயது மதிக்கதக்க ஆணும் பெண்ணும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்களைத் மோதிய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாக தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருதாக தெரிவித்துள்ளனர்.