ஹேமில்டனில் முதலாவது கஞ்சா விற்பனை நிலையம் திறப்பு

கனடாவில் கஞ்சா விற்பனை நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஹேமில்டனில் முதலாவது கஞ்சா விற்பனை நிலையம் திறக்கப்படவுள்ளது.

மேயர் ஃப்ரெட் ஐசென்பெர்ஜெர் இன்று (சனிக்கிழமை) இந்த விற்பனை நிலையத்தினை, நாடா வெட்டி திறந்து வைக்கவுள்ளார்.

குறித்த விற்பனை நிலையம், கடந்த வியாழக்கிழமை செயற்படத் தொடங்கியது. இதன்போது குறித்த விற்பனை நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல்வேறு பயிற்சி பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் வாடிக்கையாளர்களை கையாளுதல், தாமதங்களை கையாளுதல் போன்ற பல விடயங்கள் பணியாளர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.