ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியொன்று நடைபெறுகின்றது

மொன்ட்ரியல் நகரில் 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நிறுவனங்கள், தலைசிறந்த பொறியாளர்கள், ரோபோ இயந்திர வடிவமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.

அதில் அன்றாட பணிகளில் உதவும் பல்வேறு ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பளுதூக்கும் ரோபோ, சக்கர நாற்காலிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் படிகளில் ஏற உதவும் ரோபோ, நான்கு கால்களையுடைய சுமை தூக்கும் ரோபோ ஆகியவை காண்போரை வியப்பில் ஆழ்த்தின.

இதனை காண பல்வேறு நாடுகளில் இருந்து பொது மக்கள் அங்கு சென்றுள்ளனர். பார்வையாளர் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி என்பன வடிவமைக்கப்பட்டுள்ளன.