கியூபெக்கில் 1013 ஆக அதிகரித்த கொரோனா நோயாளிகள் – சுகாதார அமைச்சு

கியூபெக்கில் கொரோனா வைரசின் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1013 ஆக அதிகரித்துள்ளதாக கியூபெக் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, மார்ச் 24ம் திகதி பிற்பகல் 1 மணிவரை மொன்றியல் மாநகரில் 439 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வௌியேறியுள்ளார்.

மொன்ட்ரியலின் பிராந்திய பொது சுகாதாரத் துறை செவ்வாயன்று அனைத்து பிராந்திய சுகாதார நிபுணர்களுக்கும் கொரோனா வைரஸ் சமூக மட்டத்தில் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உறுதிசெய்து, இந்த புதிய சுகாதார நெருக்கடியில் புதிய கட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய சோதனை நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

கனடா முழுவதும் 2,792 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதில் கியூபெக்கில் மாகாணத்தில் 1,013 உள்ளன. கியூபெக்கில் நான்கு பேர் உட்பட கனடாவில் இதுவரை இருபத்தேழு பேர் இறந்துள்ளனர்.தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 1013 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கியூபெக் மாகாணத்தில் கொரோனா நோயாளர்களை அடையாளம் காண COVID-19 கொரோனா மையங்கள் நிறுவப்பட்டுள்ளது அத்தோடு மொன்றியல் இரண்டு இடங்களில் முற்கூட்டிய பதிவின் மூலம் வாகனத்தில் இருந்தவாறு (Drive through) உங்களை பரிசோதிக்கின்ற மையங்கள் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மொன்றியல் பிரதேசத்தில் சமூக பரிமாற்றம் (community transmission) தற்போது அதிகளவில் நிகழ்கின்ற காரணத்தால், கடந்த 14 நாட்களுக்குள் நாட்டுக்கு வெளியே பயணித்து நாடு திரும்பியவர் அல்லது பயணித்த ஒரு பயணியுடன் தொடர்பு கொண்டவர்களுடன் தொடர்புகளை தவிர்த்து கொள்ளுமாறு சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.

COVID-19 தொடர்பான நாளாந்த விளக்கமளிக்கின்ற செய்தி மாநாட்டில், கியூபெக்கின் பொது சுகாதார இயக்குநர் ஹொராசியோ அருடா, கியூபெக்கில் உள்ளூர் கொரோனா வைரஸ் பரவலில் மொன்றியல் பிரதேசம் முண்ணனி வகித்து வருவது ஆச்சரியமில்லை என்று தெரிவித்த அவர் மொன்றியல் நகரத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் அதிக சனத்தொகை என்பன காரணமாக அமைகின்றது என்றும் தெரிவித்தார்.