ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் 10 நாட்களுக்கு நீடிப்பு!

ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

அவசரநிலை மேலாண்மை மற்றும் குடிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபோர்ட் அரசாங்கம் வழங்கிய டசன் கணக்கான உத்தரவுகள் ஜூன் 30ஆம் திகதியுடன் காலாவதியாகும் என்று கருதப்பட்டது.

ஆனால், தற்போது மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்படுத்த அவசரகால உத்தரவுகளை ஒன்றாரியோ அரசு நீடித்துள்ளது.

அவசரகால உத்தரவுகளை நீடிப்பதோடு மட்டுமல்லாமல், உட்புற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கான சில கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும் மாகாணம் அறிவித்துள்ளது.