மனிடோபா பகுதியில் பாரிய தீ விபத்து

மனிடோபா- அபெர்டீன் அவனியூ மற்றும் சால்டர் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 7.30 மணியளவில் இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவுவதாக, தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்ரே வீட்டில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், அதிகாரிகள் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.