ரொறன்ரோவில் முதியவர் உயிரிழப்பு

ரொறன்ரோவில் முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற முதலாவது பாதசாரி உயிரிழப்பு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு குயின் வீதிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குறித்த முதியவர் படுகாயமடைந்திருந்தார்.

இதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர் 60 வயதுடையவர் என்று தெரிவித்த பொலிஸார், குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

மேலும் குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் உள்ள சி.சி.ரி.வி. காணொளிகள் மூலம் விசாரணை நடத்திவரும் அதேசமயம் சாட்சியங்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.