தமிழர் உள்ளிட்ட எட்டு பேரின் நினைவு நிகழ்வு

கனடாவில் தொடர் கொலையாளி புரூஸ் மக் ஆர்தரால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்களான கிருஷ்ணகுமார் கனகரத்னம், ஸ்கந்தராஜ் நவரத்னம் உள்ளிட்ட எட்டுபேரின் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ரொறன்ரோவிலுள்ள மெற்றோ பொலிற்ரன் கொம்மியூனிட்டி ஆலயத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஓரினச்சேர்க்கையாளனான மக் ஆர்தருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவு நிகழ்வில் உயிரிழந்தவர்கள் சார்பாகவும் மற்றும் மக் ஆர்தரால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மொத்தம் ஒன்பது மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.

ஆலயத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டாலும், உயிரிழந்தவர்களில் தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதால் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படியான பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன.