மர துகள் உற்பத்தி ஆலையில் வெடி விபத்து – மூவர் படுகாயம்

மேற்கு எட்மன்டனிலுள்ள மர துகள் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஜெனரேட்டர் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது பரவிய தீயினை சுமார் மூன்று மணித்தியாலங்கள் போராடி, தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.