சரக்கு ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

கனடாவில் சரக்கு ரயில் ஒன்றுடன் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்டா பகுதியின் 72 தெருவின் 4600வது தொகுதியில் அமைந்துள்ள சர்ச்ல் ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து சமிஞ்ஞையை மீறி ரயில் தண்டவாளத்தில் காரினை நிறுத்தி வைத்திருந்தமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்காலம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 40 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாகவே கனடாவில் ரயில் நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்று வரும் இவ்வாறான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.