தென்மேற்கு எட்மன்டனில் துப்பாக்கிச்சூடு – மூவர் படுகாயம்!

கனடாவின் தென்மேற்கு எட்மன்டனில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

எட்மன்டனின் Ellerslie வீதியினை அண்மித்த பகுதியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக கனடாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.