பனிச்சரிவில் சிக்கிய 3 பேர் ஆபத்தான நிலையில்

மவுண்ட் லாசன் பகுதில் உள்ள கானனஸ்கிஸ் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த வனப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்று அவர்களை மீட்டுள்ளதாக கல்கரி அவசர மருத்துவ சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

பனிச்சரிவு ஏற்பட்டபோது குறித்த பகுதில் 8 பேர் இருந்ததாகவும் அதில் பதின்ம வயது இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் உடன் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிராபத்தான நிலையில் இருந்த பெண்ணொருவர் உலங்குவானூர்தி மூலம் வைத்தியலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கல்கரி அவசர மருத்துவ சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.