போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கனேடியருக்கு மரண தண்டனை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட கனேடியருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த கனேடிய பிரஜைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு இன்று(திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சீன, நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், குறித்த வழக்கு தொடர்பிலான மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை எனவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.