விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக விசேட பிராத்தனை

எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்த கனேடியர்களுக்காக வின்னிபெக் தேவாலயத்தில் விசேட பிராத்தனை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று அண்மையில் தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், குறித்த விமானத்தில் பயணித்த 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே அவர்களை நினைவுகூரும் விதமாக குறித்த விசேட பிரார்த்தனை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.