அல்பேர்ட்டா ஹெல்த் சர்வீசஸில் 750இற்க்கும் செவிலியர்களை வெளியேற்ற திட்டம்

அல்பேர்ட்டாவில் ஹெல்த் சர்வீசஸ் (ஏ.எச்.எஸ்)இல் பாரிய ஆட்குறைப்பு நிகழவுள்ளதனை, அல்பேர்ட்டா ஐக்கிய செவிலியர்கள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 750இற்க்கும் மேற்பட்ட முன்னணி வரிசை செவிலியர்களை ‘அல்பேர்ட்டா ஹெல்த் சர்வீசஸ்’ இழக்கவுள்ளது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், முன்றாண்டுகளுக்கு இந்த ஆட்குறைப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை ஏ.எச்.எஸ்ஸின் முன்னணி பேச்சாளர் ரெய்லீன் ஃபிட்ஸ், அறிவித்ததாக, அல்பேர்ட்டா ஐக்கிய செவிலியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, அல்பேர்ட்டாவில் ஹெல்த் சர்வீசஸ், 500 முழுநேர-சமமான செவிலியர்களை பதவிகளில் இருந்து அகற்ற திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கத்திற்கு அறிவித்துள்ளது.

500 முழுநேர-சமமான பதவிகளை நீக்குவது என்பது 750இற்க்கும் மேற்பட்ட முன் வரிசையில் பதிவுசெய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணிநீக்கம் செய்யப்படுவதைக் குறிக்கும், ஏனெனில் பல செவிலியர்கள் பகுதிநேர வேலை செய்கிறார்கள் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டங்கள் யு.என்.ஏவின் 2020ஆம் ஆண்டு மாகாண கூட்டு ஒப்பந்தத்திற்கான பேரம் பேசுவதற்கு முன்கூட்டியே வெளிப்படுத்தப்பட்டதனால், தொழிற்சங்கம் தகவல்களை உள்வாங்கி அதற்கேற்ப பதிலளிக்க நேரம் கிடைக்கும் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

0Shares