முதலாளிமார் சம்மேளனம் நெகிழ்வு தன்மையை கடைபிடிக்க வேண்டும்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் நெகிழ்வு தன்மையை கடைபிடிக்க வேண்டும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று (23) இடம்பெற்ற புத்தக கண்காட்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுகக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்னவும் கலந்து கொண்டிருந்தார்.