பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியதாக பாகிஸ்தான் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து 955 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 83 பேர் பலியாகினர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் 2 ஆயிரத்து 805 பேர் ஆஸ்பத்திரிகளில் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 ஆயிரத்து 624 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் 78 ஆயிரத்து 261 பேரும், பஞ்சாபில் 74 ஆயிரத்து 202 பேரும், கைபர்-பலுசிஸ்தானில் 25 ஆயிரத்து 380 பேரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் 12 ஆயிரத்து 395 பேரும், பலுசிஸ்தானில் 10 ஆயிரத்து 261 பேரும், ஜில்ஜித் பலுசிஸ்தானில் ஆயிரத்து 423 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆயிரத்து 27 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.