Ontario அரசு கல்வித்துறையில் செய்யும் மாற்றங்கள்

Ontario அரசு கல்வித்துறையில் செய்யும் மாற்றங்கள்

Ontario அரசால் Mar 15, 2019இல் வெளியிடப்பட்ட “Education that works for you”என்ற திட்டத்தின் கீழ், வகுப்புக்களை நவீனமயப்படுத்தல், கற்றலை  நவீனமயப்படுத்தல், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி  நவீனமயப்படுத்தல் என்ற 3 முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன. அவை பற்றி விரிவாகக் கவனிக்கலாம்.

வகுப்புக்களை நவீனமயப்படுத்தல்
தரம் 4 முதல் 8 வரையான வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கை 23.84 இல் இருந்து 24.5 ஆக அதிகரிக்கப்படும்.
தரம் 9 முதல் 12 வரையான வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கை 22 இல் இருந்து 28 ஆக அதிகரிக்கப்படும்.

இதனால் ஏற்படும் விளைவுகள்

TORONTO, ONTARIO, CUBA – 2019/04/06: Four children with signs and yelling against Education Cuts.
Thousands of people including lot of children protests the Education cuts proposed by the Provincial Conservative Government led by Doug Ford.
The event is held in the Grounds of Queen’s Park which is the seat of the Provincial Government. (Photo by Roberto Machado Noa/LightRocket via Getty Images)

1. ஆசிரிய பணியிடங்கள் குறைவடையும்.
ஆரம்பத்தில், $851 million சேமிப்பதற்கு, அடுத்த 5 வருடங்களில் 3475 ஆசிரிய பணியிடங்களைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. பின்பு எழுந்த எதிர்ப்புக்களினால் அது கைவிடப்பட்டு, ஆசிரியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களிடத்துக்கு புதிதாக சேர்த்துக்கொள்வதில்லை என்று தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள்:
பீல் பிராந்திய பாடசாலைச் சபை – 200 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
Upper Grand பிராந்திய பாடசாலைச் சபை (Guelph) – 54 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்
Kawartha Pine Ridge பிராந்திய பாடசாலைச் சபை – 35 பணியிடங்கள்
Lambton-Kent பிராந்திய பாடசாலைச் சபை – 111 பணியிடங்கள்

சில இடங்களில் தேவைக்கு அதிகமாக பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்படுகின்றன. அவையாவன :
பீல் பிராந்திய பாடசாலைச் சபை – 369 ஆசிரியர்கள்
Toronto பிராந்திய பாடசாலைச் சபை – 1000  உயர் வகுப்பு ஆசிரியர்கள்
ஆகவே மேலதிக ஆசிரியர்கள் பணி நீக்கப்படக்கூடும்.

2. தெரிவுப்பாடங்களின் (elective courses) எண்ணிக்கை குறைவடையும்.
ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்போது குறைந்த எண்ணிக்கையான மாணவர்கள் தெரிவு செய்யும் பாடங்கள் நிறுத்தப் படக்கூடும். அதனால் பிள்ளைகளுக்கு உள்ள தெரிவுப் பாடங்களின் எண்ணிக்கையும் குறைவடையும்.

3. அதிக மாணவர்கள் இருப்பதால் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் தகைமைக்கேற்ப அவர்களுக்கு செலவிடும் நேரம் குறைவடையும்.

இவற்றால், கிராமப்புறங்களிலும் வடக்கு பகுதிகளிலுமுள்ள Frenchஐ முதன் மொழியாக கற்பிக்கக்கூடிய (Francophone)போன்ற பள்ளிகள் பாதிக்கப்படலாம்.

கற்றலை நவீனமயப்படுத்தல்
உயர் வகுப்பு மாணவர்கள் முன்பு தாம் விரும்பினால் இணையம் வழியாக பாடங்களை தேர்ந்தெடுத்து கற்கமுடியும். ஆனால், தற்போது குறைந்தது 4 பாடங்களாவது இணையம் மூலமாக கற்கவேண்டும்.

4
வருட கணித திட்டத்தின் கீழ், இணையத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்விசார் வளங்கள் அதிகரிக்கப்படும். புதிய ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் எந்தப் பாடத்தை கற்பிப்பவர்களாக இருந்தாலும் கணித அறிவு பரீட்சையில் தோற்றி ‘Ontario College of Teachers’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தரம் 3, 6, 9 வகுப்புகளுக்கு நடத்தப்படும் EQAO – கல்வியறிவு மற்றும் கணிதபாட பரீட்சையில் மாணவர்கள் போதிய புள்ளிகளைப் பெறவில்லை என்று கூறப்பட்டாலும், 2016 புள்ளிவிபரத்தகவல் படி, 2003க்கு பின்பு தரம் 6 ஐத் தவிர, தரம் 3 மற்றும் 9வகுப்புக்களில் மாணவர்கள் பெறும் புள்ளிகள் உயர்வடைந்தே வந்திருக்கின்றன.
தரம் 6 இல் தோற்றிய மாணவர்களில் அரைவாசிக்கும் குறைந்த மாணவர்கள் சித்தி பெறவில்லையாயினும், தரம் 9 இல் academic math பாடத்தில் 18%மும், applied math பாடத்தில் 24%மும் அதிகளவு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.

சுகாதாரம் மற்றும் உடற்கல்வி  நவீனமயப்படுத்தல்

பாலியல் கல்வி பாடத்தில் 1998 இல் பின்பற்றப்பட்ட பாடத்திட்டத்தை மீளவும் கொண்டுவர முயற்சித்து பின்பு, சில மாற்றங்களோடு 2015 இல் இருந்த பாடத்திட்டத்தோட ஒத்ததாகவும் மேலதிகமாக, இணைய பாதுகாப்பு, பாலினங்களை இனங்காணுதல் என்பவை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. சில பாடங்கள் தரம் 6 இல் கற்பிக்கப்படாமல் தரம் 8 இல் கற்பிக்கப்படும்.
தரம் 1 மாணவர்களுக்கு மன ஆரோக்கியம், தலைக்காயங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள்
தரம் 2 இல் குடும்பம் மற்றும் ஆரோக்கியமான குடும்ப உறவுநிலை
தரம் 6 இல் புகை மற்றும் கஞ்சா பாவனையினால் ஏற்படும் ஆபத்துக்கள் என்பவை கற்பிக்கப்படும்.

தர்ஷினி உதயராஜா