பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு

பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமிர் ஜாவித் பாஜ்வாவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாஜ்வாவின் பதவிக்காலம்  நீட்டிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் ஒப்புதல்  அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாஜ்வாவின் பதவி நீட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.