மக்கள் ஒத்துழைப்பை வழங்குவார்களாயின் இந்த சூழ்நிலையை எம்மால் வென்றெடுக்க முடியும்

மக்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்குவார்களாயின் இந்த சூழ்நிலையை எம்மால் வென்றெடுக்க முடியும் என சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உலகத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இத்தொற்றுக்குள்ளான நோயாளிகளைச் சிகிச்சையளிக்க முடியாமல் கைவிட்டுள்ளனர். ஜனாதிபதி பிரதமரின் எதிர்பார்ப்பு, எந்தவொரு கட்டத்திலும் அவ்வாறான நிலமைக்கு எமது நாடு செல்வதைத் தவிர்ப்பதாகும்.

ஆரம்பத்திலிருந்து இத்தொற்றுப் பரவுவதைத் தவிர்ப்பதற்கு சமூக இடைவெளியைப் பேணி பாடசாலைகள் மூடப்பட்டு உலகத்தில் சரியான விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரே நாடு இலங்கையாகும்.

அதனால்தான் முதலாம் நாள் தொடக்கம் 19 ஆம் நாள் வரை இப்பக்கத்திலிருப்பது நோயாளிகளின் எண்ணிக்கையும் மறுபக்கத்தில் நாட்களும் உள்ளன. 19 நாட்களில் உலகில் முன்னேற்ற நாடுகள் கூட நோயாளிகளின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கும் போதும், இலங்கை இவ்வாறு இருப்பது நாடு என்ற ரீதியில் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் மிகவும் புத்திசாதுரியமான நடவடிக்கைகளை மேற்கொண்டமையாலாகும்.

ஆகவே எமக்கு இப்போராட்டத்தை வெற்றி கொள்ள முடியும். மக்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்குவார்களாயின் இதனை வென்றெடுக்க முடியும். முக்கியமாக எமது இலங்கைப் பிரஜைகள் தொடர்பாக கூறவேண்டும், சிலாபப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். ஒரு குழந்தையின் வயது 04 மாதங்களாகும்.

இன்றிலிருந்து 14 நாட்களுக்கு முன்னர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் வீட்டில் தனிமையாக இருந்தாலும் நீங்கள் குடும்ப அங்கத்தவர்களிடமிருந்து விலகியிருங்கள். முதியவர்களிடமிருந்து விலகியிருங்கள். ஒரே குடும்மென்றாலும் அவர்களுடைய வீடுகளில் பலருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது அவ்வாறாகும். இத்தொற்று 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. முன்னேற்றமடைந்த நாடுகளில் கூட மருத்துவ வசதிகள் வழங்க முடியாமல் நோயாளர்களைக் கைவிட்டுள்ளனர்.

அந்நிலமைக்கு அபிவிருத்தியடைந்;த நாடுகள் தள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் தொற்று ஏற்பட்ட போது மக்களைப் பாதுகாப்பதற்கு பல முன்னேற்றகரமான தீர்மானங்களையும் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்ட ஒரே நாடு இலங்கையாகும்.

ஆகவே ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், தங்களுடைய குடும்பத்தாரதும் பிள்ளைகளதும் உறவினர்களதும் வாழ்வைப் பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. ஆகவே அன்பார்ந்த மக்களே முழு உலகமுமே பின்னடைந்துள்ள நிலையில், ஒரு யுத்தத்தை எதிர்கொண்ட சமூகம் என்ற ரீதியில் இந்த யுத்தத்தையும் வென்றெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.