மரபை மீறிய ஒளி ரூடோ

கி.மு 411, ஒரு நாள் காலை புத்தர் உலகைக் காண ஊர்வலம் செல்கின்றார். சித்தார்த்தா; புத்தராகின்றார். மீண்டும் ஒரு புத்தர் புரட்டாதி 13, 1960ல் உலகைக் காணும் நோக்குடன் தனது நண்பனுடன் சீனா சென்றார். அங்கு மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றினார். ஆபிரிக்காவின் புழுதி படந்த வீதிகளில் உலகைக் கண்;டார். சன நெருக்கடி அதிகமான இந்திய புகையிரத வண்டிகளில் பயணம் செய்து இந்தியாவின் அழகையும் வறுமையையும் திறமையையும் கண்டார். இவரை யார் என்பது கூட பலருக்குத் தெரியாது. யாரோ ஒரு வெள்ளை இன இளைஞன். மக்களில் ஒருவனாக மக்கள் வாழ்க்கையின் பல பரிமாணங்களை நேரில் பார்த்தார். அவர் வேறு யாருமல்ல பின்னாற்களில் உலகின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய பியரி எலியட் ரூடோ. கனடாவின் அந்தஸ்தை உலகளவில் உயர்த்தியவர். தெளிவான சிந்தனைவாதி. துணிச்சலானவர். உலகின் மிக முக்கிய தலைவர்களெல்லாம் இவரைக் கண்டு பயந்தனர். அண்டை நாடாகிய அமெரிக்காவின் அதிபர் நிக்சன் இவரை தூசன வார்த்தைகளால் திட்டியுள்ளார். அசைக்க முடியாது எனப் பெயர் பெற்ற அமெரிக்காவை ஒரு தடவையல்ல, பல தடவைகள் அசைத்துள்ளார். மேற்கு நாடுகள் இடது சாரி நாடுகளுக்கு எதிராக செயல்பட்டபோது துணிச்சலாக சோவியத் யூனியன், கியுபா, சீனா ஆகிய மூன்று இடது சாரி நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது பல்வேறு பரிமாணங்களை பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

ஆரம்ப வரலாறு

ரூடோவின் மூதாதையர் 16ம் நுhற்றாண்டில்(1641) பிரான்சிலிருந்து கியுபெக்கிற்கு குடிபெயர்ந்தனர். Etienne Truteau / Trudeau முதலில் கனடாவிற்கு குடிபெயர்ந்த கொள்ளு கொள்ளு தாத்தா. வீடுகள் கட்டுவது இவர்களது குடும்ப வணிகம். இவரது தாயார் கிரேஸ் எலியட் பிரென்ச்-ஸ்கொட்டிஸ் வழிவந்தவர். தந்தையார் பல்வேறு வணிக நிறுவனங்களை நடத்தி வந்தார். தந்தையார் சார்ல்ஸ் ரூடோவின் பெற்றோல் வியாபார நிலையங்களை மிகப் பெரிய இம்பீரியல் ஒயில் நிறுவனத்திற்கு விற்றார். செல்வந்தராக வாழ்ந்து வந்தனர். ரூடோ தனது ஆரம்ப, உயர் கல்வியை பிரபல கத்தோலிக்க தனியார் பாடசாலையான Collège Jean-de-Brébeuf பெற்றார். இக் காலகட்டத்தில் இவரது தந்தையார் இறந்துவிட்டார். இது ரூடோவின் குடும்பத்தை உணர்ச்சி பூர்வமாக பெரிதும் பாதித்தது. ரூடோ இறுதி வரை தனது தாயாருடனும் இளைய சகோதரன் சார்ல்ஸ் யூனியருடனும் சகோதரி சூசெட்டுடனும் மிக நெருக்கமாக இருந்தார். மொன்றியல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அதே சமயம் இராணுவ பயிற்சியும் பெற்றார். பின்னர் பொருளாதார அரசியலில் உயர் கல்வியை ஹவாட் பல்கலைக் கழகத்தில் கற்றார். அதன் பின்னர் 1947ல் பிரான்சிலும் பின்னர் சிறிது காலம் மிகப் பிரபல்ய லணடன் ஸ்கூல் ஒப் எக்கனமிக்ஸிலும் உயர் கல்வி கற்றார். ஹவாட் இவரது சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக மார்க்சிய சிந்தனையை இவரது மனதில் விதைத்தது. தொடர்ந்து பிரான்ஸ் இதனை வளர்த்து விட்டது. லண்டன் ஸ்கூல் ஒப் எக்னமிக்ஸ்ஸில் கலாநிதிப் பட்டத்துக்கான கல்வியை பிரபல்ய பொருளியல் நிபுணர் Harold Laski ன் கீழ் பயின்றார். ஹரோல்ட்டின் கெயின்சின் பொருளாதாரத்தை ஆய்வு செய்தார். இம் முறையானது பொருளதார வீழ்ச்சிக் காலங்களில் தேவைகளுக்கும் உற்பத்திக்குமான உறவை பரிசீலிப்பது. முதலாளித்துவ மட்டியல் கட்டுப்பாட்டுவாதத்தை ஆய்வு செய்யும் முறை எனவும் கூறலாம்.

அரசியல் வரலாறு

« The State has no place in the bedrooms of the nation »

இது ரூடோவின் மந்திரம். இதனை இவர் அமைத்த அரசில் தெளிவாகக் காணலாம்.

1949ல் கியுபெக்கில் அஸ்பெஸரஸ் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கினார். 1949-1951 கால கட்டத்தில் கனடிய பிரதமர் லுயிஸ் சென் லோறன்ட்டின் பொருளாதார ஆலோசகராகவும் வேலை செய்தார். இது இவருக்கு பின்னாளில் அரசியலில் ஈடுபட உதவி செய்தது என தனது சுயசரிதையில் கூறியுள்ளார். ரூடோ கியுபெக் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாற்ற விரும்பினார். ஆனால் அப்போதைய கியுபெக் முதலமைச்சர் Maurice Duplessis ரூடோவை கறுப்புப் பட்டியலில் இட்டமையினால் இவரால் வேலை பெறமுடியாமல் போய்விட்டது. குயின்ஸ் பல்கலைக் கழகம் மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கல்வி கற்பிக்க சந்தா;ப்பம் வழங்கியும் ரூடோ நிராகரித்து விட்டார். அவரது விருப்பம் கியுபெக்கில் கல்வி கற்பிப்பதாகவேயிருந்தது. 1950களில் இவர் மொஸ்கோவிற்கு சென்ற காரணத்தைக் காட்டி அமெரிக்காவினுன் நுழையவும் தடைசெய்யப்பட்டது. ஆனால் பின்னர் இத்தடை விலக்கப்பட்டது. மொன்றியல் பல்கலைக் கழகத்தில் 1961-1965 காலப் பகுதியில் இணை  சட்டப் பேராசிரியராக கடமையாற்றினார். ரூடோவிற்கு ஆரம்பத்திலிருந்தே என்.டி.பிக் கட்சியின் மூல அமைப்புக்களுடன் நெருக்கமான உறவு இருந்தது. 1960களில் சோசலிசக் கட்சிக்களை விமர்சித்தார். லிபரல் கட்சியுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்தார். 1961 ஆவணியில் என்.டி.பிக் கட்சி உதயமானது. அக் கட்சியில் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தும் லிபரல் கட்சியையே தேர்ந்தெடுத்தார். என்.டி.பிக் கட்சிக்கு அரசமைக்கும் ஆதரவு கிடைக்காது எனக் கருதினார். லெஸ்ரா; பியா;சனின் நீண்ட தூர மிசைல்(CIM 10 Bomarc)  மற்றும் அணு ஆயுதக் கொள்கைகளுக்கு ஆதரவான கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனாலும் 1965ல் ரூடோ தனது நெருங்கிய நண்பர்கள் Gérard Pelletier, Jean Marchand ஆகியோருடன் இணைந்து லிபரல் கட்சியில் வேட்பாளராக மொன்றயில் நகர மவுன்ட் றோயல் தொகுதியில் போட்டியிட்டார். மூவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். பியர்சனின் நிர்வாகத்தில் பாராளுமன்ற பிரதம செயலாளராக கடமையேற்றார். பின்னர் நீதியமைச்சராக பதவியேற்றார்.

1967ல் பியேர்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தவுடன் லிபரல் கட்சியின் தலைவருக்கான போட்டி 1968 சித்திரை ஆறாம் நாள் நடைபெற்றது. ரூடோ முண்ணனி வேட்பாளராக இருந்த போதும் மிகக் கடுமையான போட்டியும் ரூடோ மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இறுதியாக நான்காவது சுற்றில் 50 வீதத்துக்கு மேலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவருடன் நான்கு சுற்றிலும் இறுதிவரை போட்டியிட்டவர் பின்னாற்களில் ரூடோவின் இராஜினாமாவின் பின்னர் பிரதமாரக இருந்த ரேர்னர் ஆவார். ரூடோவுடன் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களுள் ஒருவர் முன்னால் கனடிய பிரதமர் போல் மாட்டினின் தந்தை மார்ட்டின் சீனியர். சித்திரை 20ல் பிரதமராக பதவியேற்றார். ஆனியில் தேர்தல்களை நடத்தினார். 264 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 154 தொகுதிகளை லிபரல் கட்சி கைப்பற்றியது. 1972ல் நடைபெற்ற தேர்தலில் இரு தொகுதிகள் அதிகமாகப் பெற்று சிறுபான்மை அரசை அமைத்தார். என.டி.பி ஆதரவுடன் செயல்பட்ட இவ்வரசு மீண்டும் தேர்தலை 1974ல் சந்தித்தது. இம் முறை 141 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை அரசையமைத்தது. 1979ல் நடைபெற்ற தேர்தலில் ஜோ கிளார்க் தலைமையிலான பழமைவாத கொன்சவேற்றிவ் கட்சி சிறுபான்மையரசை அமைத்தது. 1980 மாசியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் 147 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பெரும்பான்மையரசை அமைத்தது. 1979 தேர்தல் முடிந்த பின்னர் ரூடோ தனகு கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தார். புதிய தலைவர் தேர்தல் நடைபெற முன்னர் ஜோ கிளார்க் அரசு வீழ்ச்சியடைந்ததையடுத்து லிபரல் கட்சி ரூடோவை தொடர்ந்து தலைவராக இருக்குமாறு வற்புறுத்தியது. அதன் விளைவு 1980ல் லிபரல் மீண்டும் பெரும்பான்மை அரசு அமைத்தது.

அரசும் மதமும்

இன்று உலகின் அரசியல் நெருக்கடிகளுக்கு மதம் பிரதான காரணமாக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் மதம் அரசில் ஆட்சி செய்கின்றது. அமெரிக்கா போன்ற மேற்குலக புத்திஜீவி நாடுகளில் கூட மதம் சிறியளவிலாவது அரசில் ஆள்கின்றது. இதனை உணா;ந்த ரூடோ ஆரம்பத்திலிருந்தே மதம் அரசினுள் ஆட்சி செய்வதை மறுத்தார்.

“ரூடோ தேவாலயத்துக்கு செல்வார், ஒவ்வொரு நாளும் வழிபடுவார். ஆனால் தனது மத நம்பிக்கைகளை “அரசு”க்குள் கொண்டு வரவில்லை. கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு எதிரான பல செயல்களை செய்தார். ஒரு பாலியல் உறவை ஏற்றுக் கொண்டார். கருக்கலைப்பை ஏற்றுக் கொண்டார். இவற்றை மதக் கருத்துக்களாக சிறார்களுக்கு கற்பிப்பதனையும் கண்டித்தார்” என்கின்றார் முன்னால் லவால் பல்கலைக் கழக பேராசிரியா; மக்ஸ் நெமி. கத்தோலிக்க மத அரசியல் தலைவர்கள் ஜோன் கென்னடி, முன்னால் பிரென்ச் பிரதமர் சார்ல்ஸ் டி கலி போன்றோர் அரசுக்கும் மதத்துக்கும் இடையில் திண்டாடினார்கள். அரசியல், கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றில் மத சார்பு நீக்கம் என்பது பற்றி 60களில் உலகமே ஒரு குழப்பமான கருத்தையே கொண்டிருந்தது. 1960கள் வரை கியுபெக்கில் மத நிறுவனங்கள் ஆட்சியின் கருத்தை தீர்மானித்தன. குறிப்பாக கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள் போன்றவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தன. சுமார் 45 ஆயிரம் மத குருமார்கள், சகோதரிகள் இதனை நிர்வகித்தனர். ரூடோ இது பற்றி கனடியன் ஜேர்னல் ஒவ் எக்கனமிக் அன்ட் பொலிற்றக்கல் சயன்ஸ் என்ற இதழுக்கு 1958ல் கியுபெக்கில் ஜனநாயகத்துக்குள்ள தடைகள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் கியுபெக்கில் தேசியவாதமும் மதமுமே தடைக்கற்கள் எனக் குறிப்பிடுகின்றார். இவர் பின்வரும் அட்டவணையில் விளக்கப்படுத்தினார்.

**** அட்டவணை

 

பொதுவானது தனிப்பட்டது
அரசியல் மற்றும் பொருளாதார சமூகம; குடும்பம், சமூகக் குழு, மதம்
காரணங்கள்                  
பல் கலாச்சார சூழல் இனக் குழக்களுக்கான தேசிய அடையாளாம் தனிப்பட்டது
சர்வதேச விழுமியம் அகச்செயல்வாதம் மற்றும் பயன்பாட்டுவாதம் தனிப்;பட்ட ஒரு மதம், இனக் குழவின் கருத்தியல்
பகுத்தறிவால் தீர்மானிக்கப்படுவது உணா;ச்சிமிகு முடிவுகள்
விஞ்ஞான முடிவுகள் கருத்திற் கொள்ளப்படும் கட்டுப்படுத்தப்பட்டிய விழுமியங்களால் தீர்மானிக்கப்படுவது
பன்மைத்துவம், மாறுபட்டவை,வெளிப்படையானவை சிறப்பியல்பு பண்புகளாக அமையும் மாறுதலற்ற இயல்பு, பகுத்தறிவற்ற பிற்போக்கு, அந்நிய அச்சம், குழுக்களிக்கிடையேயான கட்டாய ஒற்றுமை போன்;றவை பண்புகளாக அமையும்.

 

மேற்கு நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சி மதத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது. அத்துடன் மதத்துக்கு இருந்த மக்கள் பலமும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. மதம் என்பது ஒவ்வொருவது தனிப்பட்ட தேர்வு என்பது பொதுவான நிலைப்பாடாக இருந்தது.

1967 மார்கழியில் நீத அமைச்சராக பதவியேற்ற பின்னர் கிரிமினல் சட்டங்களை நவீனமயப்படுத்தினார். அரசு ஒழுக்கத் தத்துவத்தை ஒழுங்குபடுத்துவதனை குறைக்கவேண்டும் எனக் கருதினார். பாவத்தையும் குற்றத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதனை வரையறையாக்கினார். சுமார் நூறு வருடங்கள் பழமையான பல சட்டங்களை சீர்திருத்தினார். ஒரு பாலியல் உறவுக்கான தண்டனைகளை மறுசீரமைத்தார். கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை நீக்கினார். சட்டம் சி-187 மூலம் விவாகரத்தின் மீதான கட்டுப்பாட்டுக்களை தளர்த்தினார்.

1981ல் ஒட்டாவாற்கு விஜயம் செய்த றொனால்ட் றீகன்” அராபியா;கள் கடவுளை நம்புகின்றார்கள், யூதர்கள் கடவுளை நம்புகின்றார்கள், நாங்களும் கடவுளை நம்புகின்றோம். ஏன் அனைவரும் ஒன்றினைந்து சோவியத் யூனியனுக்கு எதிராக போரிடக்கூடாது?” எனக் கேட்டார். ரூடோ அப்பொழுது சோவியத் யூனியனின் நண்பன். புன்னகையுடன் றீகனுக்கு விடைகொடுத்தார்.

 

முன்னால் ஒன்ராரியோ முதலமைச்சரும், மத்திய லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்தவரும் பொருளாதார கலாநிதியுமான பொப் ரே தனது வட்ஸ் கப்பின்ட் ரு பொலிற்றிக்ஸ் என்ற நுhலில் ரூடோ, பிரான்க் ஸ்கொட், பொரா லஸ்கின் ஆகிய மூன்று நண்பர்களும் சட்டவியல் பேராசிரியர்களும் பிரித்தானியச் சட்டங்கள் கனடிய சட்டங்கள் மீது செலுத்திய ஆதிக்கத்தை தகர்க்க விரும்பினார்கள்.

பொப் ரே தனது நூலில்“Like Churchill in 1940, Mr. Trudeau was the right man for the right issue” எனக் கூறியுள்ளார்.

 

ரூடோ – அமெரிக்கா- சோவியத் ருசியா

 

ரூடோ பிரதமராக இருந்த காலங்களில் அமெரிக்காவிற்கும் அவருக்குமான உறவு சிக்கலாகவேயிருந்தது. 1973ல் வியட்நாமுடனான சமாதானக் குழுவிற்கு கனடாவின் பெயரை அப்போதைய அமெரிக்க அமைச்சர் ஹென்றி கீசிங்கர் முன்மொழிந்திருந்தார். ஆனால் ரூடோ அக் குழுவால் எதுவும் செய்ய முடியாது எனக் கருதியதால் கனடா தொடர்ந்து அக்குழுவில் இடம்பெறவில்லை. அமெரிக்க அதிபர் நிக்சன் ரூடோவை “asshole  எனத் திட்டினார். பதிலளித்த ரூடோ நல்ல மனிதர்களால் இதனை விட மோசமாக திட்டு வாங்கியுள்ளேன் என்றார்.  ( I’ve been called worse things by better people”) (1) நிக்சன் அமெரிக்க இறக்குமதிகளுக்கு பத்து வீத உபரிவரியிட்டபோது கனடாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் பாதிப்புக்குள்ளானது. ரூடோ கனடிய பொருளாதாரம் அமெரிக்காவில் தங்கியிருக்கக் கூடாது எனக் கருதினார். நிக்சன் 10வீத உபரிவரி உலக நாடுகளுடன் கதைத்த போதும் கனடாவுடன் உரையாடவில்லை. ஒரு தடவை ஹென்றி கீசிங்கரிடம் ரூடோ பிரதமராக இருக்கும் வரை நான் கனடா செல்லமாட்டேன் எனக் கூறியுள்ளார். ஆனால் சித்திரை 1972ல் ஒட்டாவாவிற்கு விஜயம் செய்தார். நிக்சன் மிக மோசமான வார்த்தைகளால் ரூடோவை திட்டியுள்ளார். அமெரிக்கா, வியட்நாமுடன் போரிட்டதை ஆதரிக்கவில்லை. கனடிய கடல் எல்லையை அமெரிக்கா மீறுவதாக ரூடோ உறுதி செய்து கொண்டார். ரூடோ பாராளுமன்றத்தில் ஆக்டிக் நீர் மாசுபடுதல் சட்டத்தை அமுல்படுத்தினார். இதனை அமெரிக்கா விரும்பவில்லை. நிக்சனின் அமைச்சராகவிருந்த வில்லியம் பி. றோஜர்ஸிடம் தனது எதிர்ப்பை கனடா தெரிவித்திருந்தது. இறுதியில் கனடாவின் சட்டத்தை பின்பற்றி ஐ.நா சட்டமொன்றை உருவாக்கியது.

 

நிக்சன் சீனாவுடனான உறவை மேற்கொண்டபோதும் ருசியாவுடன் ஆயுத கட்டுப்பாட்டு உடன்பாட்டுக்களை மேற்கொண்டபோதும் ரூடோ நிக்சனை பாராட்டினார்.

1971ல் பிரதமராக ருசியாவிற்கு விஜயம் செய்தார். அங்கு அவர் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் இல்லை என்றார். சைபீரியாவில் அமைந்துள்ள நோர்லிசிக் (Norilsk) நகரைப் போன்று கனடாவில் ஒரு நகரமும் இல்லை என்றார். இது ஒரு தொழிற்சாலைகள் அடங்கிய நகரம். இதனை கைதிகள்தான் உருவாக்கினார்கள் என்பதனை அப்போது ரூடோ அறிந்திருக்கவில்லை.

ருசிய பயணத்தைத் தொடர்ந்து நேட்டோவில் கனடாவின் பங்களிப்பைக் குறைத்தார். அமெரிக்காவின் எழுச்சியானது கனடாவிற்கு பொருளாதார, கலாச்சார, இராணவ பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருத்துத் தெரிவித்தார்.(3).

1983ல் கொரிய பயணிகள் விமானம் 369 பயணிகளுடன் பறந்த போது பயணிகள் விமானம் எனத் தெரிந்தும் சோவியத் சுட்டு வீழத்தியது. இவ் விடயம் பற்றிய பாராளுமன்ற உரையாடலில் “சோவியத்தை கொலைகாரர்கள் என்ற பார்வையில் பார்க்காமல் அவர்களையும் மனிதர்களாக பார்க்க வேண்டும்” என்றார்.

சோவியத் யூனியனை நேசித்திருந்தாலும் அமெரிக்காவும் சோவியத்தும் இன்றைய உலகின் கழுகுகள் என விமர்சிக்கவும் ரூடோ தவறவில்லை. இந்தத் துணிச்சல் இவரை உலகரங்கில் ஒரு சிறந்த தலைவராக உயர்த்தியது.

 

சீனா-கியுபா

 

சீனாவிற்கு இவர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது சீனா இவருக்கு பெருத்த வரவேற்பை வழங்கியது. மாவோவின் கொள்கைகளை கனடிய பாராளுமன்றத்தில் ஆதரித்து பேசினார். சீனாவை வெளியிலிருந்து அறிய முடியாது என்று வாதிட்டார்.

தை 26, 1976ல் கியுபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். கியுபாவிற்கு சென்ற முதல் கனடிய பிரதமர், முதல் நேட்டோத் தலைவர் ரூடோ ஆவார். சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வீதிகளில் வரிசையில் நின்று ரூடோவை வரவேற்றனர். கஸ்ரோ ரூடோவை ஒரு நல்ல வழிகாட்டியாகவே கருதினார். ரூடோ இறந்த போது கஸ்ரோ கியுபாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுஸ்டித்தனர். அரச அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

 

ஒக்ரோபர் கிறைசஸ் (ஐப்பசி நெருக்கடி நிலை)

 

ரூடோ பிரதமராக இருந்த காலங்களில் நடைபெற்ற மிக முக்கிய அரசியல் புரட்சி 1970 ஐப்பசியில் இடம்பெற்றது. ஐப்பசி 26ந் திகதி வோர் மெசிசேர்ஸ் அக்ட்டின் (War Measures Act) நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடிய சரித்திரத்தில் இச் சட்டம் இன்று வரை மூன்று முறையே நடைமுறைப்படுத்தப்பட்டது. முதலாவது முறை முதலாம் உலகப்போர், இரண்டாம் முறை இரண்டாம் உலகப் போர். மூன்றாவது ஐப்பசி நெருக்கடி நிலை ஆகியவற்றில் மட்டுமே பிரயோகிக்கப்பட்டது. ஐப்பசி நெருக்கடியின் போது 497 பேர் எந்தவித முன்னெச்சரிக்கையோ விசாரணையோயின்றி கைது  செய்யப்பட்டனர். பின்னர் 67 பேர் விடுவிக்கப்பட்டனர்.

 

1963ல் ஆரம்பிக்கப்பட்ட கியுபெக் பிரிவினைவாத ஆயுத அமைப்பு Front de libération du Québec (FLQ).1963லிருந்து 1970 வரை 67 குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர். குறிப்பாக ஆங்கில மொழி பேசும் கியுபெக் நகரமான வெஸ்ட்மவுண்ட்டில் அதிகளவு தாக்குதல்கள் இடம் பெற்றன. தபால் பெட்டிகளுக்குள் டைனமைட்டை போட்டனர். இவற்றைவிட மொன்றியல் பங்குச் சந்தை, ஆர்.சி.எம்.பி அலுவலகம் மொன்றியல் நகரசபை போன்ற இடங்களிலும் குண்டுகள் வெடித்தன. உச்சக் கட்டமாக ஐப்பசி 5, பிரித்தானிய வணிக உயர் அதிகாரி ஜேம்ஸ் குரொசை அவரது வீட்டில் வைத்துக் கடத்தினர். ஐந்து நாட்களின் பின்னர் கியுபெக் உப முதலமைச்சரும் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்கள் அமைச்சர் பியரி லபொட்டைக் (Pierre Laporte) அவரது வீட்டின் பின் முற்றத்தில்வைத்துக் கடத்தினர். 102 வருடங்களின் பின்னர் (Thomas d’Arcy McGee) கனடாவில் ஒரு அரசியல் கொலை நடைபெற்றது. புரட்டாதி 17ம் நாள் சென் கியுபெட் விமான நிலையத்துக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரினுள் லபொட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கியுபெக் முதலமைச்சர் மத்திய அரசாங்கத்தினை நாடினார். அதன் பின்னர் ரூடோவினான ஊடகவியல் மாநாட்டில் நடைபெற்ற உரையாடலே கீழேயுள்ளது.

 

Reporter: “Sir what is it with all these men with guns around here?”

Trudeau: ” There’s a lot of bleeding hearts around who don’t like to see people with helmets and guns. All I can say is ‘go ahead and bleed’ but it’s more important to keep law and order in this society than to be worried about weak-kneed people who don’t like the looks of…”

Reporter: “At what cost? How far would you go? To what extent?”

Trudeau: “Well, just watch me.”

ஜேம்ஸ் குரொஸ் இரு மாதங்களின் பின்னர் ஐந்து எப்.எல்.கியு உறுப்பினர்களை நாடு கடத்தியதுடன் விடுவிக்கப்பட்டார். நாடு கடத்தியவர்களை கியுபாவே ரூடோவின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்றுக் கொண்டது.

 

கியுபெக் பிரிவினைவாத ஆயுதப் புரட்சியை ரூடோவின் அதிரடி நடவடிக்கைகளும் இராஜதந்திரமும் கட்டுக்குள் கொண்டு வந்தது. ரூடோ ஒரு பிரென்ச்ஐ தாய் மொழியாகக் கொண்டவர். கியுபெக் அவரது தாய்ப் பிரதேசம். ரூடோ ஒரு மார்க்சியவாதியாக இருந்தமையினால்தான் கியுபெக் பிரிவினைவாதத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடிந்தது. அவர் சோவியத் யூனியனிலும், சீனாவிலும் பல இனக் குழுக்கள் ஒன்றாக இருப்பதனையும் அதன் பொருளாதார பலத்தையும் கண்டுள்ளார். கியுபெக் பிரிவினைவாதிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டபோதும் ஜனநாயக வழியில் கியுபெக் பிரிவினைவாதக் கட்சிகள் போராடின. சர்வசன வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தினார். முதலாவது வாக்கெடுப்பு 1980ம் ஆண்டு வைகாசி 20ம் நாள் நடைபெற்றது. அப்போதைய கனடிய பிரதமரான ரூடோ கியுபெக் மாநிலத்தைச் சேர்ந்தவர். 60 வீதமான மக்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தனர். இதுவும் ரூடோவின் காலத்திலேயே நடைபெற்றது. இன்று வரை கியுபெக் பிரிவினைவாதிகளால் வெற்றி பெறமுடியாமல் உள்ளது. எமது தேசியமும் இவ்வாறுதான் அடக்கப்பட்டதா? ஜனநாயக முறை தேசியப் போராட்டங்களும் சக்தியை இழக்கின்றனவே? ஏன்? கியுபெக் போராட்டத்தினூடாக எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்வியையும், இன்றைய நிலையையும் ஆய்வு செய்ய வேண்டும்.

 

முதல் குடிகள்

 

கனடாவின் முதல் குடிகளின் “இன்டியன் அக்ட்”ஐ நீக்க வேண்டும். அதற்கான அமைச்சை நீக்க வேண்டும் போன்ற விடயங்கள் ரூடோவினால் முன்வைக்கப்பட்டன. முதல் குடிகள் அவா;கள் வாழும் நிலத்தை அவர்கள் பெயருக்கே மாற்ற வேண்டும். அவர்கள் வாழும் பிரதேச மாநிலம் அவர்கள் நலனை பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அவரால் முன்மொழியப்பட்டன.

 

ரூடோ முதன் குடிகள் தேசிய நீரோட்டத்தில் கலப்பதன் மூலம் தான் அவர்கள் நலன்கள் பாதுகாக்கப்படும் எனக் கருதினார். அவர்கள் பிரதேசம், தேசியம் என்பன பற்றி ரூடோவிற்கு கவலையில்லை. இன்றும் கூட முதல் குடிகள் மிகவும் மோசமான நிலையில்தான் வாழ்கின்றார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது ரூடோவின் தூர நலன் பார்வை வித்தியாசமானது. தொடர்ந்து அவர்கள் இதே மாதிரி ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் ஓடுக்கப்பட்டவர்களாக வாழப்போகின்றார்களா? அவர்களுக்கான தீர்வு என்ன? என்ற கேள்விகளுக்கு ரூடோவின் பின்னர் வந்த அரசுகள் பதிலளிக்கவில்லை.

 

மீண்டும் ரூடோவின் முதல் குடிகள் பற்றிய கருத்துக்கள் அவர் உள்வாங்கிய மார்க்சிய சிந்தனையின் வெளிப்பாடாகவே கருதலாம்.

 

அரசியல்சாசன மாற்றங்கள்

 

கியுபெக் பிரிவினைவாதப் போராட்டங்களின் விளைவு பல அரசியல்சாசன மாற்றங்களை ஏற்படுத்தின. ரூடோவின் காலத்தில் சிறுபான்மையினரின் நலன் உறுதிப்படுத்தப்பட்டது.

 

முதலாவது மாற்றம் பிரித்தானியாவின் ஆளுமையிலிருந்து கனடாவை பிரித்தெடுப்பது, அதாவது சட்ட மாற்றங்களுக்கு பிரித்தானியாவின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை. இரண்டாவது மாற்றம் மாநில மத்திய அரசுகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் பொதுமக்களை பாதிக்கக் கூடாது. (Canadian Charter of Rights and Freedoms) இதற்கு ஒன்ராரியோ முதலமைச்சர் பில் டேவிஸ், நியு புரென்ச்விக் முதலமைச்சர் றிச்சட் ஹட்பீல்ட் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இவ்விருவரும் பழமைவாதக் கட்சி முதலமைச்சர்கள். ரூடோவிற்கு எதிராக ஏனைய எட்டு முதலமைச்சர்களும் கூட்டுச் சேர்ந்தனர். த கான்க் ஒப் எயிட் (the Gang of Eight) என கனடிய சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை விட நாங்கள் நியமிக்கும் நீதிபதிகளுக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன என்றார்கள். தங்களது முடிவுகளை நீதிபதிகள் நிராகரிக்கலாம் என்பது அவர்கள் வாதம். முதலாவது சட்டமாற்றம் உயர்நீதிமன்றத்தில் ரூடோவிற்கு அரசியலமைப்பை மாற்றும் அதிகாரமுண்டு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து என்மரால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது. பொதுமக்கள் நலன் சட்டத்தை தொடர்ந்து எதிர்த்தனர். ரூடோ சர்வசனவாக்கெடுப்பு நடத்துவேன் என தொடர்ந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து பணிந்தனர். ஆனாலும் கியுபெக் முதலமைச்சர் இவர்களிலிருந்து இறுதி நேரத்தல் விலகிவிட்டார். சட்ட மாற்றங்கள் தனது மாநில சுயாட்சிக்கு எதிராக அமையும் எனக் கருதினார். இரண்டாம் எலிசபெத் இராணியினால் 1982 சித்திரை 17ம் நாள் ஒட்டாவில் வைத்து கையொப்பமிட்டு மாற்றியமைக்கப்பட்டது. அன்று கியுபெக் அரசு தனது கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு தனது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டது. இன்று நாங்கள் அனுபவிக்கும் பல சுதந்திரங்கள் ரூடோவினால் ஏற்படுத்தப்பட்டது.

 

 

 

BNA Act from British trusteeship – an insulting vestige of colonialism – and bring it to Canada

The Last Act: Pierre Trudeau, the Gang of Eight, and the Fight for Canada

 

 

பெற்றோ கனடா

 

ரூடோவின் ஆட்சியில் மலர்ந்த ஒரு மலரே பெற்றோ கனடா.

 

1972-1974 காலப்பகுதியில் ரூடோ அரசு ஒரு சிறுபான்மை அரசு. உலக எண்ணெய் விலை உச்சத்தை எட்டியது. அப்பொழுது பாராளுமன்றத்தில் என்.டி.பிக் கட்சி எண்ணெய் விற்பனைக்கான அரச கூட்டுத்தாபனம் அமைக்கப்படவேண்டும் என சட்டமொன்றை முன்மொழிந்தது.  ஆட்சியில் இவ்விரு கட்சிகளும் இணைந்தே பெற்றோ கனடா என்ற அரச கூட்டுத்தாபனத்தை அமைத்தார்கள்.

1973ல் எண்ணெய் வழங்கும் அரேபிய நாடுகள் ( Organization of Arab Petroleum Exporting Countries (OAPEC, consisting of the Arab members of OPEC plus Egypt and Syria), இஸ்ரேலுக்கு போரில் ஆதரவு வழங்கும் அமெரிக்க, யப்பான், மேற்கு ஜரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது என கூறிவிட்டது. இதே சமயம் ஒபெக் ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் பின்வரும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக விலையை தீர்மானித்தது. வளாந்த நாடுகளில் உள்ள எண்ணெய் தேவை காரணமாக இது ஒபெக்கிற்கு சாதகமாக அமைந்தது.

 

Standard Oil of New Jersey (Esso), which merged with Mobil to form ExxonMobil.

Royal Dutch Shell (Dutch / British)

Anglo-Persian Oil Company (APOC) (British). Gpd;dhypy; BP – British Petroleum  ஆக மாறியது

Standard Oil Co. of New York (“Socony”). Gpd;dhypy ExxonMobil ஆக மாறியது

Standard Oil of California (“Socal”). Gpd;dh;; Chevron. ஆக மாறியது

Gulf Oil..

Texaco. Gpd;dh;; Chevron. ஆக மாறியது

 

இந்த எண்ணெய் விலை மாற்றம் ஒரு கலனுக்கு 1973 வைகாசியில் 38.5 சதமாக இருந்து 1974 ஆனியில் 55.1 சதமாக அதிகரித்தது. 1974ல் ஆறு கிழமைகளில் நியு யோர்க் பங்குச் சந்தை 97 பில்லியனை இழந்தது. பிரான்ஸில் 30 வருட தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி முடிவுக்கு வந்தது. 2009ல் பெற்றோ கனடா சனோகோ நிறுவனத்துடன் இணைந்தது.

இவரது பயணங்கள்

 

1960ல் நண்பன் ஜக்ஸ் ஹேபர்ட்டுடன் இணைந்து ஆறு வாரங்கள் சீனாவில் சுற்றுப் பயணம் செய்தார். அதன் தொடர்ச்சியாக Two Innocents in China என்ற நூலையும் எழுதினார். சித்திரை 1960ல் கியுபெவாவிற்கு புளோரிடாவிலிருந்து வள்ளத்தில் கியுபாவிற்கு பயணமானார். கடும் அலைகள் இவரது பயணத்தை தடைபோட்டன. 1964ல் கியுபாவிற்கு சென்று விட்டு வந்து “ அங்கு தேர்தல்கள் இல்லை. நூறு பரனைட் வெயிலில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கஸ்ரோ 90 நிமிடங்கள் பேசுகின்றார். அங்கு தேர்தலின் அவசியம் என்ன? என்றார் (2) ரூடோ உலகின் முக்கிய மூன்று இடது சாரி நாடுகளுக்கும் பிரதமராக முன்னரும், ஆட்சி செய்த போதும், ஓய்வு பெற்றபின்னரும் விஜயம் செய்துள்ளார். ரூடோ தனது பிள்ளைகளையும் இடது சாரி நாடுகளுக்கும் ஆபிரிக்க ஆசிய நாடுகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். இவரதும் இவரது பிள்ளைகளது வளர்ச்சிக்கும் இவரது பயணங்கள் உதவி புரிந்துள்ளன.

 

இளைப்பாறுதல்

 

முன்னால் ஜேர்மன் அதிபர் ஹெல்மட் சிமிட், ஜப்பானிய பிரதமர் பொக்கூடா, ரூடோ ஆகிய முன்னால் அதிபர்கள் ஒரு பொது இடத்தில் வருடத்தில் மூன்று தடவைகள் சந்திப்பார்கள். இவர்கள் சந்திக்கும் பொழுது பொதுவாகவே உலகில் நடைபெறும் அப்போதைய முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிப்பார்கள். அவற்றை விட பல்கலைக் கழகங்கள் போன்ற இடங்களில் முக்கிய விடயங்கள், அரசியலமைப்பு மாற்றங்கள் பற்றி விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார். தொடர்ச்சியான அரசியலமைப்பு மாற்றங்களில் இவரது உரைகள் முக்கிய பங்காற்றியுள்ளன.

 

ரூடோவின் குடும்பம்

 

ரூடோ தன்னை விட 28வயது இளைய மார்கிரெட் சின்ஹிலெயரை 1971ல் திருமணம் செய்தார். இவரது தந்தை முன்னர் லிபரல் அமைச்சராக இருந்தவர். இவர்களுக்கு; ஜஸ்ரின், சாசா, மைக்கல் ஆகிய மூன்று பிள்ளைகள் உண்டு. 1977ல் இவர்கள் பிரிந்தனர். 1981ல் விவாகரத்துப் பெற்றனர். இவரது பிள்ளைகள் ரூடோவுடனேயே வளர்ந்தனர். 1998ல் இவரது இளைய மகன் மைக்கல் பனிச் சறுக்கல் விளையாட்டிக் கொண்டிருந்த போது பனிச்சரிவினால் உயிரிழந்தார். அதன் பின்னர் புரட்டாதி 28, 2000ம் ஆண்டு இறந்தார்.

 

இன்றைய கனடா

 

இன்றைய கனடா ரூடோவின் கனடா. பிரிவினைவாதத்திலிருந்து கனடாவை மீட்டு ஒன்றாக்கியவர். பல்கலாச்சாரம், இருமொழியியல், கலாச்சார, இன ஒத்தியாயமை, மாநில வேறுபாடுகள், சகிப்புத்தன்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, பண்பட்ட பழக்க வழக்கமுறை, சர்வதேசம், மாநிலங்களிடையே சமஉரிமை போன்றவற்றை கனடாவில் ஏற்படுத்தியவர் ரூடோ. இவர் உள்வாங்கிய மார்க்சிய சிந்தனைகளே இவரை வழிநடத்தின. அவ்வகையில் மேற்கில் நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு மார்க்சியவாதி எனக் குறிப்பிட்டால் மிகையாகாது.

 

இன்றைய லிபரல் அரசாங்கம் பல வழிகளில் ரூடோவையே பின்பற்றுகின்றது. இவரது சீடரான ஜீன் ஹிரிச்சியன் 10 ஆண்டுகள் ரூடோவின் வழியைப் பின்பற்றி கனடாவை ஆட்சி செய்துள்ளார். ரூடோவிடமிருந்த பல குணங்கள் இவரிடமிருந்துள்ளன. இரண்டாவது கியுபெக் பிரிவினை சர்வசன வாக்கெடுப்பு இவரது காலத்திலேயே தோல்வி கண்டது. இன்றைய புதிய பிரதமர் ரூடோவின் மகன் ஜஸ்ரின் ரூடோ. தந்தையின் பிம்பமாகவேயுள்ளார்.

 

இவர் எழுதிய நூல்கள்

 

 

Pierre Elliott Trudeau and Jacques Hébert, Two Innocents in Red China(1961).

Pierre Elliott Trudeau, Approaches to Politics (1970).

Pierre Elliott Trudeau and David Crenna, ed., Lifting the Shadow of War (1987).

Thomas S. Axworthy and Pierre Elliott Trudeau, Towards a Just Society: The Trudeau Years (1990).

Pierre Elliott Trudeau, Memoirs (1993).

Ivan Head and Pierre Elliott Trudeau, The Canadian Way: Shaping Canada’s Foreign Policy, 1968-1984 (1995).

Pierre Elliott Trudeau and Gérard Pelletier, ed., Against the Current: Selected Writings, 1939-1996 (1996).

Pierre Elliott Trudeau and Ron Graham, ed., The Essential Trudeau(1999).

 

 

உசாத்துணை நூல்கள்

 

 

The Truth about Trudeau by Bob Plamondon -Page 35, Page 22,36

Pierre Elliot Trudeau – Approaches to Politics – Oxford Press

The Hidden Pierre Elliott Trudeau – The faith behind the Politics- Edited by John English, Richard Gwyn and P.Whitney Lackenbauer

Pierre Elliott Trudeau  by Nino Ricci

What’s Happened to Politics by Bob Rae

The Essential Trudeau – M&S

Against the Current – Selected Writings 1939-1996 – M&S

Just Watch Me by John English