கொலம்பியாவில் விமான விபத்து – 4 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டின் தலைநகரான பொகடாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. இரட்டை என்ஜின்கள் கொண்ட அந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

அங்குமிங்கும் பறந்த விமானம் பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.