Plug ‘n’ Play Music Academyயின் முதலாவது இசை நிகழ்ச்சி

Plug ‘n’ Play Music Academyயின் முதலாவது இசை நிகழ்ச்சி

‘Concerto 2019’ கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி Toronto Fairview Library அரங்கத்தில் academyயின் இயக்குனர்கள் திரு.தர்ணன் யோகேந்திரநாதன் மற்றும் திரு.தர்ஷாந்தன் ஞானசேந்தன் ஆகியோரின் நெறியாள்கையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இயக்குனர்கள் தர்ணன் மற்றும் தர்ஷாந்தன் ஆகியொர், இலங்கையில் திரு. L.B.Anton Dias இன் வழிகாட்டலில் பெற்ற கற்பித்தல் அனுபவத்தினாலும், கற்பித்தலில் உள்ள அதீத ஆர்வத்தினாலும்  Plug ‘n’ Play Music Academyயை  2018ம்  ஆண்டு கனடா, Toronto, Scarborough நகரில் நிறுவினர். Concerto 2019 நிகழ்வில் சிறுவர் முதல் இளையோர் வரை ஆர்வத்துடன் கற்று சிறப்பாக இசைக்கருவிகளை வாசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா தேசிய கீதத்துடன் தொடங்கி, ஒவ்வொரு வயது பிரிவிலான மாணாக்களின் குழு வாத்திய இசை மற்றும் தனி வாத்திய இசை என நிகழ்வு களைகட்டியது. மாயநதி, ஆளப்போறான் தமிழன், ஊலாலா போன்ற சமீபத்திய பாடல்கள் பலவற்றுடன் நீ பார்த்த பார்வை, காதல் ரோஜாவே, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற பாடல்களும், ஜெய் ஹோ, Pirates of the Caribbean, Feeling good, Final countdown போன்ற பல பிற மொழி பாடல்களையும் கொண்டமைந்து இந்நிகழ்வு கேட்போரின் ஆர்வத்தை நிகழ்வின் இறுதி வரை தொடரச் செய்தது. இந்நிகழ்வில் தம்மிடம் கற்கும் மாணாக்களின் பிற கலைத்திறன்களையும் (Guitar, drums வாத்திய இசை) மேடையேற்றியது பாராட்டத்தக்கது.

Plug ‘n’ Play Music Academy இல் சிறுவர்களுக்கான Keyboard வாத்திய மற்றும் Piano வாத்தியத்திற்கான இசை வகுப்புகள் வழங்கப்படுவதுடன் மட்டுமின்றி Trinity College London மற்றும் University of West London இன் London College of Music பரீட்சைகளுக்கான Keyboard பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு, டிப்ளோமா தரத்தின் மேல் University of West London இனால் பட்டமளிப்பு விழாவும் நடைபெறும்   Royal Conservatory of Music பரீட்சைகளுக்கான Piano வகுப்புகளும் நடாத்தப்படுகின்றன. (தர்ணன் 647-887-2320 தர்ஷாந்தன் 647-620-9775)

Plug ‘n’ Play Music Academyயின் இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்களான திரு.தர்ணன் யோகேந்திரநாதன் மற்றும் திரு.தர்ஷாந்தன் ஞானசேந்தன் ஆகிய இருவரும் இலங்கையில் 2012 ம் ஆண்டு, Nelum Pokuna Mahinda Rajapaksa Stadium இல் திரு. L.B.Anton Dias இனால் Largest Electronic Keyboard Ensemble இற்கான கின்னஸ் சாதனையிலும் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மேலும் இந்நாட்டில், அடுத்த தலைமுறையினருக்கு கலைச்சேவை புரிய வாழ்த்துகிறோம்.

( இந்நிகழவின் முழுமையான புகைப்படங்களை eகுருவி இணையத்தளத்தில் பார்வையிடலாம் ) Plug ‘n’ Play Music Academyயின் முதலாவது இசை நிகழ்ச்சி