அரசியல் தீர்வு முயற்சிகளின் எதிர்காலம்? ekuruvi editorial jan 2019

அரசியல் தீர்வு முயற்சிகளின் எதிர்காலம்?

2009,ல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகின்றது. மே மாதம் வந்தால் சரியாக பத்து வருடங்கள் முடிகிறது. ,ந்த பத்து வருடங்களில் ,டம்பெற்ற அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு எவ்வாறான வெற்றியை தந்திருக்கிறது? ,ந்தக் கேள்விக்கு நாம் அனைவரும் ,தய சுத்தியுடன் பதில்காண வேண்டியவர்களாக ,ருக்கிறோம் அல்லவா!

,ந்தக் காலத்தல் பல்வேறு அலங்கார வார்த்தைகளுடன் எமது காலம் கழிந்திருக்கிறது. தாயக அரசியலுக்கு தலைமை தாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் மென்வலு ராஜதந்திரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் சர்வதேச சமூகத்துடன் ,ணைந்து பயணிப்பதாகவும் பல கதைகளை சொல்லி வந்தது. அது ஒரு புறம் என்றால் மறுபுறம், புலம்பெயர் தேசங்களில் ,யங்கிவரும் தமிழ் செயற்பாட்டார்களோ, சறிலங்காவை போர்க்குற்ற விசாரணை மற்றும் மனித குலத்திற்கு எதிரான விசாரணை பொறியில் அகப்படுத்தும் தந்திரோபாயங்களில் ஈடுபட்டுவருவதான ஒரு தோற்றத்தை காண்பித்துவந்தனர். அதற்காக ,ரவு பகலாக செயற்படுவதான தோற்றத்தையும் காண்பித்துவந்தனர். ஆனால் ,ன்று தமிழர் அரசியல் வந்து நிற்கும் ,டத்தையும், சிறிலங்காவின் செயற்பாடுகளையும் உற்று நோக்கினால் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டமைப்பின் செயற்பாடுகளும் சரி, புலம்பெயர் அரசியல் செயற்பாடுகளும் சரி, குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்தவொரு விளைவையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. அவ்வாறாயின் கடந்த பத்து வருடங்களில் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மீள்பரிசீலனைக்கு உள்ளாக்குவதுதானே சரியான அணுகுமுறையாக ,ருக்க முடியும்.

,லங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுத்து நோக்கினால் ஏமாற்றம் மட்டுமே எஞ்சிக்கிடக்கிறது. புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரப் போவதான கதைகளும் முடிவுக்கு வந்துவிட்டன. விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் ,டையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, அப்போது ஜனாதிபதியாக ,ருந்த சந்திரிக்கா குமாரதுங்க, தடாலடியாக ரணில் அரசாங்கத்திடமிருந்த மூன்று முக்கிய அமைச்சர்களை பதவிநீக்கி, அந்தப் பொறுப்புக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சமாமான முன்னெடுப்புக்களில் முட்டக்கட்டையை போட்டார். ,தனை ஒரு சாட்டாகக் கொண்டு ரணில் பின்வாங்கினார். புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் ,றுதிக்கட்டத்தை எட்டிவிட்டதான ஒரு தோற்றத்தை கூட்டமைப்பினரும் ரணில் தரப்பும் காண்பித்துக் கொண்டிருந்த வேளையில், திடிரென்று ரணிலை பதவி நீக்கி, மூன்று வருடங்களாக ,ருந்த கூட்டு அரசாங்கத்தின் ஆயுளை முடித்தார் மைத்திரிபால சிறிசேன. ,தனைத் தொடர்ந்து, புதிய அரசியல் யாப்பு முயற்சிகளின் கதை முடிவுக்கு வந்தது. ,ந்த நிகழ்வுகள் எதனை காண்பிக்கிறது? ,வைகள் எல்லாம் தற்செயலாக நடைபெறுகின்றது என்றா, நினைக்கின்றீர்கள்?

விடயங்களை ஆழமாகப் பார்த்தால், ,லங்கைத் தீவில் அரசியல் தீர்வு தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிவடைந்திருக்கின்றன. ஏன்? ,தனை ,ன்னும் ஆழமாகப் பார்த்தால் 1987 ,ந்திய – ,லங்கை ஒப்பந்தத்ததிற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு அரசியல் தீர்வு முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை – ஏன்? 1987 ஒப்பந்தத்தின் விளைவாக வந்த 13வது திருத்தச் சட்டம் ஒன்றுதான் ,துவரை ஒரு அரசியல் ஏற்பாடு என்னும் வகையில் சட்டமாக்கப்பட்ட ஒரேயொரு ஏற்பாடு. ,தனை சற்று ,ன்னும் ஆழமாக பார்த்தால், 1987 ,ந்தியத் தலையீட்டிற்கு பின்னர், ,லங்கையில் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு அரசியல் ,ணக்கப்பாட்டு முயற்சியிலும் ,ந்தியா நேரடியாக சம்மந்தப்படவில்லை. அனைத்தும் மேற்குலக தலையீடுகளின் விளைவாகவே ,டம்பெற்றன. சமாதான உடன்பாடு தொடங்கி, தற்போது பேசப்படும் புதிய அரசியல் யாப்பு வரையில் அனைத்துக்கும் பின்னால் மேற்குலகம்தான் ,ருந்தது. ஆனால் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. எனவே ,ந்த விடயங்களில் நாங்கள் கவனிக்க வேண்டிய வேறு பக்கங்கள் ,ருக்கின்றதா? கடந்த பத்து வருட கால தோல்வி அனுபவங்களிலிருந்து நாம் சிந்திக்க வேண்டுமாயின், நமது சிந்தனையை வெறுமனே, கொழும்பு, புலம்பெயர் சமூகம் என்னும் எல்லைக்குள் முடக்காமல் வேறு கோணங்களிலும் ,ந்தப் பிரச்சினையை ஆராய வேண்டியிருக்கிறது. வட்டங்களை கீறிக் கொண்டு அதற்குள்தான் பயணிப்போம் என்று அடம்பிடித்தால் நாம் எவ்வளவுதான் முயன்றாலும் கூட, அதிக தூரத்திற்கு நாம் செல்லப் போவதில்லை.