பூர்வீககுடிமக்களின் பண்பாட்டுஅபகரிப்பு

சங்க காலத்தில் ஓர் அரசன் போர் புரிந்து நாட்டை வென்ற பின்னர், அங்கு ஒரு சிற்றரசனை நியமித்து அரசாட்சி செய்வது வழக்கம். சில சமயங்களில் சிற்றரசரை நியமிக்காமல் அந்த நாடு முழுமையாக அழிந்து போக விடப்படும்.

இதற்காக அரசர்கள் செய்த யுக்திகளில் ஒன்றுதான் கொள்ளு விதைத்தல் ஆகும். அழிக்கப்பட வேண்டிய நாட்டில் உள்ள மக்களையும், வளங்களையும் தனது அதிகாரத்தில்  உள்ள பகுதிகளுக்கு இடம்மாற்றி விட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள வயல்களில் கொள்ளு எனப்படும் தானிய வகையை விதைத்து விடுவார்கள்.

இந்தக் கொள்ளு என்ற தானியத்தின் சிறப்பம்சம்யாதெனில், அதை எங்கு விதைத்தாலும் நல்ல விளைச்சல் கிடைக்கும்; மழையோ தண்ணீரோ அதிகம் தேவையில்லை; பராமரிப்பும் தேவையில்லை; தம்மைத் தாமே இனப்பெருக்கி குறுகிய காலத்தில் பெருகிவிடும்.

இதைவிட கொள்ளுக்குரிய இன்னுமொரு முக்கியமான சிறப்பம்சம், மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் தாரளமாக உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. இதனால் கொள்ளு விதைத்த பகுதிகளில் உள்ள மண்வளங்கள் யாவும் விரைவில் பாதிப்படைந்து,வேளாண்மைக்கு உதவாத பகுதியாக மாறிவிடும். இதன் மூலம் நீண்ட காலத்திற்கு இந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியாதநிலை தோன்றும். இதுதான் அரசர்கள் ஒருநாட்டை உருப்படாமல் செய்வதற்கு செய்யும் இயற்கையான வழிமுறை.
இதே பாணியில் நாடு ஒன்றிற்குப் பதிலாக, உலகில் வாழ்ந்த ஒருமனித இனம் மறைமுகமாக அழிவுக்குள்ளாகியிருப்பது நாகரிகம் அடைந்த உலகில், வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வாக உள்ளது.

இயற்கையோடு வாழ்ந்து, அதனை நேசித்து, ஒன்றித்து, வணங்கி, பண்பாட்டு விழுமியங்களில் சங்கமித்து, பலமொழிகள் பேசி, சமூகப் பொருளாதார முறைமைகளைக் கொண்டு உறுதியாக இருந்த ஒரு சமுதாயம் தான் கனேடிய பூர்வீக குடிமக்களாவர் (யுடிழசபைiயெட pநழிடந). இந்த சமுதாயத்தின் கட்டுமானம் தான் ஐரோப்பியர்களின் திட்டமிட்ட சதியினாலும், ஆக்கிரமிப்பினாலும் சீர்குலைக்கப்பட்டது.  இந்த நிலை கனடாவில் வாழ்ந்த பூர்வீக குடிமக்களுக்கு மட்டுமல்ல; அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த பூர்வீக குடிமக்களுக்கும் ஏற்பட்டது. உலகெங்கும் இவர்கள் யுடிழசபைiயெட Pநழிடநஇ யேவiஎந ஐனெயைளெஇ குசைளவ யேவழைn Pநழிடநஇ சுநன ஐனெயைளெ போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.

கனேடிய பூர்வீக குடிமக்கள் என்பது, ஐரோப்பியர்கள் கனடாவிற்கு குடியேற முன்பு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வாழ்ந்த மக்கள் ஆகும்.

கண்ணியமாகவும், கட்டுப்பாடாகவும் வாழ்ந்த கனேடிய பூர்வீக குடிமக்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் பின்வரும் மூன்று இனங்களாகப் பிரிக்கப்படுகின்றனர்.

முதல் குடிமக்கள் (குசைளவ யேவழைளெ), இனியுட் (ஐரெவை),மெற்ரிஸ் (ஆநவளை).

அத்துடன் இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களின் அடிப்படையில் மேலும் பல பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெரிய சமுதாயத்தின் நீண்டகால அழிவின் பின்னர், 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி, கனடாவில் 1இ400இ 685 பூர்வீக குடிமக்கள் வாழ்வதாகத் தெரிய வருகின்றது. இது கனடாவின் மொத்த சனத்தொகையில் 4.3 சதவீதமாகும். இவர்களில் முதல் குடிமக்களின் தொகை 851,560 ஆகவும், மெற்ரிஸ் இன் தொகை 451,795 ஆகவும், இனியுட் இன் தொகை 59,445 ஆகவும் இருக்கின்றது.

ஐரோப்பியர்கள், குளிர் தேசத்தில் எவ்வாறு தப்பிப் பிழைத்தல் என்பதை பூர்வீக குடிமக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு, அவர்களுக்கே ஆப்பு வைத்து விட்டார்கள். தொடர்ந்த ஐரோப்பியர்களின் குடியேற்றமும் ஆதீக்கமும் பூர்வீக குடிமக்களின் வாழ்வியலை சிதைத்து குட்டிச் சுவராக்கியது.

ஐரோப்பியர்கள் வந்த போது தனிச்சொத்துரிமை என்ற கருத்துருவை மட்டுமே கொண்டிருந்த இந்த மக்களிடமிருந்து பெரும்நிலப்பகுதிகளை மிகச் சொற்ப தொகைகளுக்கு ஐரோப்பியர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள். இதனால் பூர்வீக குடிமக்களின் சொத்துகள் பெருமளவில் அபகரிக்கப்பட்டு ஐரோப்பியர்களின் கைகளுக்கு மாறியது. இதற்கு முக்கியஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது போதைப் பொருட்கள் ஆகும். குறைந்த விலையில் மதுபானங்களை அதிகளவில் விநியோகித்து, பூர்வீககுடி மக்களை அதில் அடிமையாக்கி, காரியத்தை இலகுவில் முடித்துக் கொண்டார்கள். இது ஒரு முற்று முழுதான ஏமாற்றும் செயலாகவே கருதப்படுகின்றது. அத்துடன் ஐரோப்பியர்களின் வருகையினால் புதுப்புது நோய்களும் மக்களுக்குப் பரவ ஆரம்பித்தது. இந்தப் புதியநோய்களுக்குரிய எதிர்ப்புத்தன்மை மற்றும் மருத்துவ வசதிகள் எதுவும் இன்றி பெரும்பான்மையான பூர்வீக குடிமக்கள் மரணமடைந்தார்கள். ஐரோப்பியர்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள், இவர்களுக்கு கிடைக்காமையே இந்த அழிவுக்கு காரணமாக அமைந்தது.

ஐரோப்பியர்களின் வருகையை எதிர்த்து பூர்வீக குடிமக்கள் பல வழிகளிலும் போராட முயன்ற போதும், துப்பாக்கிகளுக்கு முன்னால் அம்பும், வில்லும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தொழில்நுட்பத்திலும், ஒழுங்கமைப்பிலும், நிர்வாகத்திலும் மேம்பட்டிருந்த ஐரோப்பியர்கள் இவர்களை இலகுவாக வெற்றிக் கொண்டார்கள் என்பதே உண்மை. ஐரோப்பியர்கள் ஆயிரத்து நானூறுகளின் பின்பகுதியில் அமெரிக்கக் கண்டத்தைஆக்கிரமித்துத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் ஆவர். அதன் பின்னரான காலத்தில் பூர்வீககுடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் அத்தியாவசிய வசதிகளற்று அரசியல், சமூகம், கல்வி, விளையாட்டு போன்ற எந்த துறையிலும் போதிய முன்னேற்றமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

அகதிகளாக வந்த புலம்பெயர் மக்களை இந்நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டுவரும் அரசுகள், பூர்வீக குடிமக்களை அவர்களது சொந்த இடத்திலேயே கவனிப்பாரற்று விட்டுவிட்டது. வீதிகளில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களில் (hழஅநடநளள) பெருமளவிலானவர்கள் பூர்வீக குடிமக்களே என்பது கவலைக்குரிய விடயம்.

தமது சமய மற்றும் பண்பாட்டுக் கொள்கைகளை வலியுறுத்திய ஐரோப்பியர்கள், கணிசமான அளவு பூர்வீக குடிமக்களை கட்டாயமாக கிறித்தவ சமயத்திற்கு மதமாற்றம் செய்தார்கள். அதற்கு வறுமையும்  ஒரு காரணமாக இருந்தது.

கிறித்தவ பாடசாலைகள்அமைக்கப்பட்டு, குழந்தைகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். விடுதிகளில் தங்க வைக்கப்பட்ட பூர்வீக குடிமக்களின் குழந்தைகள் மீது பாடசாலை நிர்வாகம் இழைத்த கொடுமைகள் எண்ணிலடங்காது.

பிள்ளைகளை மதம் மாற்றி, அவர்களை தமது பழக்க வழக்கங்களுக்கு இசைபட வைத்து அவர்களின் பாரம்பரியத்தை முற்றாக இழக்கச் செய்தார்கள்.

பாடசாலை விடுதிகளில் இடம்பெற்ற துஷ்ப்பிரயோகங்களும், கொடுமைகளும் இறுதியில் நிர்வாகத்தினரால் ஒப்புக்கொள்ளப்பட்டு முடிவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தனிமை வாழ்க்கை, ஏழ்மை நிலை, உறைவிடமின்மை, பண்பாட்டு விழுமியங்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமை போன்ற பல காரணங்களால் பாதிப்படைந்த இந்த சமுதாயத்தில் தற்கொலை, போதைப் பொருள்பாவனை, குற்ற நடவடிக்கை போன்றவை தலை விரித்தாடுகின்றன.

கனேடிய அரசுகள் யாவும் பூர்வீக குடிமக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள போதும் அது எந்த அளவுக்கு வெற்றியடையும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

அண்மைக்காலங்களில் பூர்வீக குடிமக்கள் பற்றிய பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் ளுயளமயவஉhநறயnஇல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம், பூர்வீக குடிமக்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்தி நிற்கின்றது.  அரச நிர்வாகம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நிதி வசதிகள் தேவைப்படுபவர்களுக்கு சரியாகச் சென்றடைந்தால் மட்டுமே பூர்வீக குடிமக்கள் அழிவு நோக்கிய தமது பயணத்தில் இருந்து மீள முடியும்.

இயற்கையுடனான சங்கமிப்பு என்ற வாழ்வியல் வேதாந்தத்துடன் வாழ்ந்த ஒரு சமுதாயத்தின் நிலப்பரப்பில் ஐரோப்பியர்கள் விதைத்த கொள்ளு பற்றைக் காடுகளாகி விட்டது.

– எஸ்.ராஜ்மோகன்